அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
மேம்பட்ட மூலப்பொருட்களில் ஆராய்ச்சி, மேம்பாட்டை ஊக்குவிக்க இந்தியாவும் ஜெர்மனியும் கூட்டுப் பிரகடனத்தில் கையெழுத்திட்டன
Posted On:
25 OCT 2024 6:59PM by PIB Chennai
அறிவியல்-தொழில்நுட்பத் துறையில் இந்திய, ஜெர்மன் ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லும் குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், ஜெர்மன் அமைச்சர் திருமதி பெட்டினா ஸ்டார்க்-வாட்ஸிங்கர் ஆகியோர் பரஸ்பர நன்மைகளைப் பெறுவதற்கான உறுதிப்பாட்டுடன் மேம்பட்ட பொருட்களின் ஆராய்ச்சி, மேம்பாட்டில் ஒத்துழைப்புக்கான விருப்பத்தின் கூட்டுப் பிரகடனத்தை பரிமாறிக் கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற இந்த பரிமாற்றம், புதுமைகளை ஊக்குவிப்பதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் அதிநவீன ஆராய்ச்சியை வளர்ப்பதற்கான இரு நாடுகளின் உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.
இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான முழுமையான கூட்டத்திற்கு முன்னதாக டாக்டர் ஜிதேந்திர சிங்கும், திருமதி ஸ்டார்க்-வாட்சிங்கருக்கும் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தை, இந்திய-ஜெர்மன் அறிவியல் - தொழில்நுட்ப ஒத்துழைப்பின் பொன்விழா கொண்டாட்டத்தின் முக்கிய பகுதியாக இருந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068197
--------------
PLM/RS/DL
(Release ID: 2068226)
Visitor Counter : 68