மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

25 மில்லியன் டாலர் மதிப்பில் கால்நடை பெருந்தொற்றுநோய் தடுப்பு நிதிய திட்டம்- மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் தொடங்கிவைத்தார்

Posted On: 25 OCT 2024 5:06PM by PIB Chennai

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங்,   கால்நடைகளுக்கு பெருந்தொற்றுநோய் தடுப்புக்கான நிதியத்தை புதுதில்லியில் இன்று  (25.10.2024) தொடங்கி வைத்தார்.  பெருந்தொற்றுநோய் நிதிய திட்டம் என்பது ஜி20 பெருந்தொற்றுநோய் நிதியத்தால் நிதியளிக்கப்பட்ட 25  மில்லியன் டாலர் மதிப்பிலான முன்முயற்சியாகும்.

இந்நிகழ்ச்சியில் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர்கள் பேராசிரியர் எஸ்.பி.சிங் பாகேல் மற்றும் திரு ஜார்ஜ் குரியன் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.  

மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்  தமது உரையில், சமூக, பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடைத் துறையின் பங்களிப்பை எடுத்துரைத்தார். பல திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் கால்நடைத் துறை அபரிமிதமான வளர்ச்சியைக் எட்டியுள்ளது என்றும் அவர் கூறினார். தேசிய விலங்கு நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் (NADCP) மூலம், கோமாரி நோய் (FMD), புருசெல்லோசிஸ் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி நாட்டிலிருந்து ஒழிப்பதை இத்துறை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.  இதுவரை, மொத்தம் 90.87 கோடி எஃப்.எம்.டி தடுப்பூசிகளும், புருசெல்லோசிஸுக்கு  4.23 கோடி தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியின்போது, இந்தியாவில் கால்நடை சுகாதார நிர்வாகத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இரண்டு முக்கியமான ஆவணங்களையும் மத்திய அமைச்சர் வெளியிட்டார்:

நிலையான கால்நடை சிகிச்சை வழிகாட்டுதல்கள், விலங்கு நோய்களுக்கான நெருக்கடி மேலாண்மை திட்டம் ஆகிய இந்த ஆவணங்கள் கால்நடை மருத்துவர்கள், கொள்கை வகுப்பாளர்கள், கள அதிகாரிகளுக்கு முக்கிய வழிகாட்டிகளாக செயல்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068146

***

TS/PLM/RS/DL




(Release ID: 2068175) Visitor Counter : 30