தேசிய மனித உரிமைகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்துகிறது

இடுகை இடப்பட்ட நாள்: 25 OCT 2024 3:29PM by PIB Chennai

2024 அக்டோபர் 23 அன்று ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் ஊடகச் செய்திகளை  அடிப்படையாக வைத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தாமாக முன்வந்து விசாரணையை நடத்துகிறது. இந்த சம்பவம்  குண்டூர் மாவட்டத்தின் ரெட்டிபாலம் கிராம பஞ்சாயத்து பகுதியில் உள்ள பள்ளி விடுதி வளாகத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நான்கு வாரங்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தி விரிவான அறிக்கை அளிக்குமாறு ஆந்திர அரசின் தலைமைச் செயலாளருக்கும் காவல்துறை தலைமை இயக்குநருக்கும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

காவல் துறை விசாரணையின் நிலை, மரணத்திற்கான காரணம்,  பிரேத பரிசோதனை அறிக்கை போன்றவற்றையும் விசாரணையின் பிற விவரங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2068073

***

TS/PLM/RS/KR/DL


(வெளியீட்டு அடையாள எண்: 2068168) வருகையாளர் எண்ணிக்கை : 71
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Telugu