நிலக்கரி அமைச்சகம்
மின் உற்பத்தித் திறனை அதிகரிக்க இரண்டு கூட்டு நிறுவனங்களை அமைப்பதற்காக என்.எல்.சி இந்தியா நிறுவனம் ராஜஸ்தானுடன் கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
24 OCT 2024 3:08PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையுடனும் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோரின் வழிகாட்டுதல்படியும் நீடித்த எரிசக்தி உற்பத்தியுடன் எரிசக்தி பாதுகாப்பிற்காக தீவிரமான திறன் சேர்ப்பதற்கான கார்ப்பரேட் திட்டத்திற்கு ஏற்பவும், என்எல்சி இந்தியா நிறுவனம், ராஜஸ்தான் மாநில அரசின் வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனத்துடன் இரண்டு கூட்டு முயற்சிகளை உருவாக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுவுவதற்காக முதலாவது கூட்டு முயற்சி ஒப்பந்தமும் பழுப்பு நிலக்கரி அடிப்படையிலான அனல் மின் நிலையத்தை உருவாக்க இரண்டாவது கூட்டு முயற்சி ஒப்பந்தமும் கையெழுத்தானது.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் திரு பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, ராஜஸ்தான் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் திரு அலோக் ஆகியோர் முன்னிலையில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் (நிதி) திரு பிரசன்ன குமார் ஆச்சாரியா, ராஜஸ்தான் மாநில அரசின் வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான திரு தேவேந்திர ஷ்ரிங்கி ஆகியோர் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். இந்தக் கூட்டு முயற்சிகளில் என்எல்சி இந்தியா நிறுவனம் 74% சமபங்குகளையும் ராஜஸ்தான் மாநில அரசின் வித்யுத் உத்பதன் நிகாம் நிறுவனம் 26% சமபங்குகளையும் கொண்டிருக்கும்.
இந்தக் கூட்டு முயற்சிகள் நீடிக்கவல்ல எரிசக்தி மற்றும் மின் உற்பத்தியில் முன்னேற்றத்தைக் காட்டுகின்றன.
***
TS/SMB/AG/DL
(रिलीज़ आईडी: 2067880)
आगंतुक पटल : 58