விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் 2024 நவம்பர் 28 முதல் 30 வரை 13-வது தேசிய விதை மாநாட்டை நடத்த உள்ளது
Posted On:
24 OCT 2024 11:52AM by PIB Chennai
மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், 2024 நவம்பர் 28-30 வரை, உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நடைபெறவுள்ள 13-வது தேசிய விதை மாநாட்டை நடத்துகிறது. சர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம், தெற்காசிய பிராந்திய மையம் மற்றும் தேசிய விதை ஆராய்ச்சி, பயிற்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேசிய விதை மாநாடானது இத்துறை தொடர்பானவர்களை ஒன்றிணைத்து, மாற்றத்தை ஏற்படுத்தும் தீர்வுகளை ஆராய்வதற்கும், தற்போது துறை எதிர்கொள்ளும் கடும் சவால்களை எதிர்கொள்வதற்கும் ஒரு பொதுவான தளத்தை வழங்கும்.
தேசிய விதை மாநாட்டின் பங்கைச் சுட்டிக் காட்டிய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறையின் கூடுதல் செயலாளர் திருமதி சுபா தாக்கூர், "விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும், கோடிக்கணக்கான மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உயர்தரமான, பருவநிலை மாறுதலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்கின்ற மற்றும் சத்தான விதைகள், மேம்பட்ட சாகுபடிகளுடன் கிடைப்பது என்பது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்று தெரிவித்தார்., இந்த மாநாடு,விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் நாட்டின் விவசாயம் வலுவாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதி செய்வது ஆகியவற்றுக்கான ஒரு தளமாக செயல்படும். இந்த நிகழ்வு புதுமையான தீர்வுகளை ஊக்குவிப்பதோடு, விதைத் துறை வளர்ச்சியை மேம்படுத்தும் கூட்டாண்மைகளை ஊக்குவிக்கும்.
ஆர்வமுள்ளவர்கள் மேலும் விவரங்களுக்கு இணையதளத்தைப் பார்வையிடலாம் மற்றும் இணைப்பைப் பயன்படுத்தி பதிவு செய்யலாம்: https://13thnscindia2024.com/index.html
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067586
***
TS/IR/RS/KR
(Release ID: 2067646)
Visitor Counter : 51