பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சாணக்யா பாதுகாப்பு உரையாடலின் இரண்டாவது பதிப்பை ராணுவம் நடத்துகிறது

Posted On: 23 OCT 2024 5:19PM by PIB Chennai

இந்திய ராணுவம் தனது முதன்மை சர்வதேச கருத்தரங்கின் இரண்டாவது பதிப்பான சாணக்யா பாதுகாப்பு உரையாடலை 2024 அக்டோபர் 24,25  ஆகிய தேதிகளில் புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் நடத்த உள்ளது. இந்த உயர்மட்ட நிகழ்வு, தேசிய, சர்வதேச கொள்கை உருவாக்கத்திற்குள் பாதுகாப்பு சூழலை  ஒருங்கிணைப்பது குறித்த முக்கிய விவாதங்களுக்கு உதவும். மேலும், நிலையான, உள்ளடக்கிய வளர்ச்சிக்கான தொலைநோக்கு உத்திகளை வடிவமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல், இலங்கையைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகளுடன் இந்தியாவையும் பிறநாடுகளையும் சேர்ந்த கொள்கை வகுப்பாளர்கள், உத்திசார் சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பாதுகாப்புப் படை அதிகாரிகள், உள்ளிட்டோரை இந்த இரண்டு நாள் நிகழ்வு ஒருங்கிணைக்கும். தேசிய வளர்ச்சியில் விரிவான பாதுகாப்பின் பங்கை மையமாகக் கொண்டு, வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இந்தியாவின் இலக்கு குறித்தும் இந்த உரையாடல் ஆராயும்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமை விருந்தினராக இந்த நிகழ்வைத் தொடங்கி வைக்க உள்ளார். 'வளர்ச்சியிலும், பாதுகாப்பிலும் இந்தியாவின் பார்வை' என்ற தலைப்பில் அவர் முக்கிய உரையாற்ற உள்ளார். ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியும் நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளார்.

**

TS/PLM/KPG/DL


(Release ID: 2067480) Visitor Counter : 42


Read this release in: English , Urdu , Hindi