தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச தொலைத்தொடர்பு சங்கம் கலைடாஸ்கோப் 2024 -ன் 2-ம் நாள் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சங்கள்

Posted On: 23 OCT 2024 8:42AM by PIB Chennai

புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச தொலைத் தொடர்பு சங்கம் 2024-ன் ஒரு பகுதியாக நேற்று முடிவடைந்த கலைடாஸ்கோப் 2024-ன் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், நிலையான வளர்ச்சியை இயக்கும் செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட மாற்றங்களுக்கு வழிவகுக்கும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேரி கார்மென் அகுவாயோ டோரஸின் சிறப்பு விளக்கக்காட்சியுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி, தொழில்நுட்பத் துறைகளுக்கு பெண்களை ஈர்க்க பொதுத்துறை-தனியார்துறை கூட்டாண்மையை உள்ளடக்கிய தொழில்நுட்ப தீர்வுகளை வலியுறுத்தியது.

ஸ்பெயினின் பாஸ்க் கண்ட்ரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஈவா இபரோலா இந்த விளக்கக்காட்சி அமர்வுக்கு தலைமை தாங்கினார். இந்திய அரசின் தொலைதொடர்புத் துறை உறுப்பினர் (சேவைகள்) திரு ரோஹித் சர்மா, மின்னணு மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர்கள் நிறுவனத் தலைவர் திரு சுனில் குமார் ஆகியோர் நீடித்த வளர்ச்சிக்கான சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் கொள்கை அம்சங்கள் குறித்த அமர்வுகளுக்கு தனித்தனியே தலைமை தாங்கினர்.

இந்த நிகழ்வு சுகாதாரம், கல்வி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு பயன்பாடுகள் குறித்த  நுண்ணோக்கு அறிவை வழங்கியது. சுகாதாரம், கல்வி, வேளாண்மை  ஆகியவற்றில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம், செயற்கை நுண்ணறிவு மூலம் நோயறிதல் மற்றும் கிராமப்புறக் கல்வி அணுகலில் செயற்கை நுண்ணறிவின் பங்களிப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2067228    

***

TS/IR/RS/KR

 


(Release ID: 2067302) Visitor Counter : 42