நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி அமைச்சகம் சுரங்க மூடல் சான்றிதழை வழங்கியதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையை அடைந்துள்ளது
Posted On:
22 OCT 2024 4:39PM by PIB Chennai
நிலக்கரி அமைச்சகம் பதகேரா பகுதியின் டபிள்யூ.சி.எல் நிறுவனத்திற்கு இறுதி சுரங்க மூடல் சான்றிதழ்களை வழங்கியதன் மூலம் நீடித்த நிலையான சுரங்க நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க சாதனையை அறிவித்துள்ளது. நிலக்கரி சுரங்கத் துறையில் சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு முயற்சிகளில் இது ஒரு பெரிய முன்னெடுப்பு நடவடிக்கையைக் குறிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி, மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் திரு விக்ரம் தேவ் தத், நிலக்கரி கட்டுப்பாட்டு அதிகாரி திரு சஜீஷ் குமார் நிலக்கரி அமைச்சகம், நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் நிலக்கரி / பழுப்பு நிலக்கரி பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கீகரிக்கப்பட்ட சுரங்க வரைபடத்தின்படி, இறுதி சுரங்க மூடல் விதிகளுக்கு இணங்க பாதுகாப்பு, மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகள் சுரங்க உரிமையாளரால் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதற்காக இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. நிலக்கரி அமைச்சகத்தின் சார்பு அலுவலகமான நிலக்கரி கட்டுப்பாட்டு அமைப்பு இந்த சான்றிதழ் வழங்கும் அதிகாரம் பெற்றதாகும்.
மூடல் சான்றிதழ்களைப் பெற்ற மூன்று சுரங்கங்கள்:
பதகேரா சுரங்கம் எண்-II யுஜி: தொடக்கத்தில் ஜனவரி 1970 இல் பெதுல் மாவட்டத்தில் என்.சி.டி.சி உரிமையின் கீழ் திறக்கப்பட்டது. நிலக்கரி இருப்பு தீர்ந்து போனதால் இந்தச் சுரங்கம் மூடப்பட்டுள்ளது.
பதகேரா சுரங்கம் எண்-I யுஜி: மே 16, 1963 அன்று மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் நிறுவப்பட்டது. மூன்று நிலக்கரி சுரங்கங்களிலும் பிரித்தெடுக்கக்கூடிய இருப்புக்கள் தீர்ந்துவிட்டதால் இந்தச் சுரங்கம் மூடப்பட்டுள்ளது.
சத்புரா II யுஜி சுரங்கம்: ஜூன் 1973 இல் பெதுல் மாவட்டத்தில் திறக்கப்பட்டது. அங்கீகரிக்கப்பட்ட திட்ட வரம்புகளுக்குள் நிலக்கரி வளம் குறைந்து வருவதால் இந்தச் சுரங்கம் மூடப்பட்டுள்ளது.
இறுதி சுரங்க மூடல் சான்றிதழ்களை டபிள்யூ.சி.எல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை நிர்வாக இயக்குநர் திரு. ஜே.பி. திவேதி, டபுள்யூ.சி.எல் பொது மேலாளர் திரு. தீபக் ரேவத்கர் மற்றும் பதர்கேடா பகுதி டபிள்யூ.சி.எல் பகுதி பொது மேலாளர் திரு. எல்.கே. மொஹாபத்ரா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிலப்பரப்புகளுக்கு புத்துயிரூட்டுதல் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் பொறுப்பான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலக்கரி சுரங்கத்தை நோக்கி செயல்படும் நிலக்கரித் துறையின் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது. இந்திய நிலக்கரி சுரங்க வரலாற்றில் முதல் முறையாக நிலக்கரி சுரங்கங்களுக்கு இத்தகைய சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது ஒரு மைல்கல்லாகும்.
**
TS/PKV/KV/DL
(Release ID: 2067128)
Visitor Counter : 37