நிலக்கரி அமைச்சகம்
கோல் இந்தியாவின் ஒரு பிரிவான எஸ்.இ.சி.எல் தனது சிறப்பு பிரச்சாரம் 4.௦-ன் போது டிஜிட்டல் முறைமைகளுக்கு உந்துதல் அளிப்பதை மேம்படுத்தியுள்ளது
Posted On:
22 OCT 2024 1:55PM by PIB Chennai
கோல் இந்தியாவின் இரண்டாவது பெரிய துணை நிறுவனமான தென்கிழக்கு கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் (எஸ்.இ.சி.எல்), சிறப்பு பிரச்சாரம் 4.0-ன் ஒரு பகுதியாக அதன் டிஜிட்டல் மாற்றத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. புதுமை, உள்ளடக்கம் மற்றும் செயல்பாட்டு செயல்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம், எஸ்இசிஎல் நிறுவனமானது செயல்முறைகளை நெறிப்படுத்துவதற்கும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும்நிறுவனத்திற்குள்ளேயே தொடர்ச்சியான கற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கும் தேவையான தொடர்ச்சியான டிஜிட்டல் முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்இசிஎல்-ன் சிஎம்டி தகவல் பலகை என்பது நிறுவனத்தின் தலைமையகம் மற்றும் செயல்பாட்டு பகுதிகளில் பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்களை கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான ஆன்லைன் தளமாகும். பயனர்கள் எந்தவொரு துறையிலும் தனது தேவைகளை தெரிவிக்கவும் அவர்களின் கோரிக்கைகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கவும் தகவல் பலகை உதவுகிறது. இது புதிய, முன்னேற்றத்தில் உள்ள மற்றும் தாமதமான பணிகளின் கண்ணோட்டத்தை வழங்குவதுடன் எஸ்இசிஎல்-யின் நிறுவனங்களுக்கு இடையேயான செயல்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மை, ஒத்துழைப்பு மற்றும் செயல்திறனை வளர்க்கிறது.
நிறுவனத்தின் நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை நிலம் கையகப்படுத்தும் மேலாண்மை அமைப்பு மூலம் டிஜிட்டல் மயமாக்கியுள்ளது. இது பாரம்பரியமாக சிக்கலான நிலம் கையகப்படுத்தும் நடைமுறைகளை எளிதாக்குவதுடன், விரைவுபடுத்தவும் செய்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், குஸ்முண்டா மெகா திட்டத்தின் கீழ் கோத்ரி கிராமம், மேலாண்மை அமைப்பைப் பயன்படுத்தி டிஜிட்டல் நிலம் கையகப்படுத்தலை நிறைவு செய்த முதல் கிராமங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
எஸ்இசிஎல் ஊழியர்களிடையே அறிவுப் பகிர்வை ஊக்குவித்த அபிமன்யு மின்-இதழ் கடந்த ஆண்டு வெற்றிகரமாக தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, எஸ்இசிஎல் இப்போது அபிமன்யு மின்-கற்றல் தளத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்தத் தளம் ஊழியர்களுக்கு கூட்டு முறையில் கற்றல், அறிவுப் பகிர்வு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கான ஆன்லைன் இடத்தை வழங்குகிறது. இது அவர்களின் தொழில்முறை வளர்ச்சியை மேம்படுத்துகிறது.
மக்களை மையமாகக் கொண்ட நடைமுறைகளில் சிறப்பு பிரச்சாரம் 4.0-ன் கவனம் செலுத்துவதற்கு இணங்க, எஸ்இசிஎல் அதன் ஆன்லைன் குறை தீர்க்கும் அமைப்புகளை முன்கூட்டியே முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. 30 நாட்களுக்கும் மேலாக எந்தக் குறையும் நிலுவையில் இல்லாததால், நிறுவனம் அதன் புகார் தீர்வு செயல்முறையை நெறிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் விரைவான தீர்வை உறுதி செய்யப்படுகிறது.
எஸ்இசிஎல் அதன் டிஜிட்டல் மாற்றத்தை இயக்க பல்வேறு உள் வலைப் பயன்பாடுகளையும் உருவாக்கியுள்ளது. முக்கியப் பயன்பாடுகளில் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளைக் கண்காணிக்கும் சிஎஸ்ஆர் பயன்பாடும் அடங்கும்; தடையற்ற மருத்துவப் பரிந்துரைகளை எளிதாக்கும் சிராயு செயலி மற்றும் சட்ட விஷயங்களின் கண்ணோட்டத்தை வழங்கும் வித்திக் செயலி ஆகியவை அதன் பணியாளர்கள் மற்றும் செயல்பாடுகளின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனித்துவமான, திறமையான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குவதற்கான எஸ்இசிஎல்-ன் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.
இந்த முயற்சிகள் மூலம், எஸ்இசிஎல் அதன் டிஜிட்டல் உந்துதலை முன்னெடுத்து, டிஜிட்டல் ரீதியாக அதிகாரம் பெற்ற கோல் இந்தியாவின் ஒட்டுமொத்த கண்ணோட்டத்திற்கு பங்களிக்கிறது. சிறப்பு பிரச்சாரம் 4.0 அதிக கண்டுபிடிப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்பாட்டு சிறப்பை நோக்கிய எஸ்இசிஎல்-ன் பயணத்தில் ஒரு ஊக்கியாக உள்ளது.
***
TS/PKV/KV
(Release ID: 2067029)
Visitor Counter : 30