பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மாணவர் படையின் குடியரசு தின முகாம்-2025-ஐ முன்னிட்டு 500-க்கும் அதிகமான மாணவர்கள் கங்கை மற்றும் ஹூக்ளி நதிகளில் 1,200 கி.மீ. பயணத்தை மேற்கொள்ள உள்ளனர்

Posted On: 20 OCT 2024 12:55PM by PIB Chennai

 

தேசிய மாணவர் படை (என்சிசி) முதல் முயற்சியாக அதன் சிறப்பு படகுப் பயணத்தைத் தொடங்க உள்ளது. இது குடியரசு தின முகாம் 2025-க்கு முக்கிய நிகழ்வாக இருக்கும். இந்தப் பயணம் இந்தியா முழுவதிலும் இருந்து 528 கடற்படைப் பிரிவு மாணவர்களை உள்ளடக்கியது. உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்கம் வழியாக கங்கை மற்றும் ஹூக்ளி நதிகளில் சுமார் 1,200 கி.மீ. தூரத்திற்கு  ‘பாரத நதிகள்கலாச்சாரத்தின் பிறப்பிடங்கள்என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த நிகழ்வு கான்பூரில் 2024, அக்டோபர் 21 அன்று தொடங்கி , 2024, டிசம்பர் 20  அன்று கொல்கத்தாவில் நிறைவடையும்.

இந்தியாவின் வளமான கடல்சார் மரபுகளைக் கொண்டாடும் அதே வேளையில் இளைஞர்களை சாகசம் மற்றும் சீருடையில் சேவை செய்யும் வாழ்க்கைக்கு ஊக்குவிப்பது இந்த முன்னோடிப் பயணத்தின் நோக்கமாகும். இந்த ஆறு கட்ட நிகழ்வில் அனைத்து மாநில இயக்குநரகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவர்கள் பங்கேற்பார்கள். அவர்களுடன் சுமார் 40 இணை என்சிசி அதிகாரிகள் வருவார்கள். பயணத்தின் முக்கிய கட்டங்கள் பின்வருமாறு:

கட்டம் I: கான்பூர் முதல் பிரயாக்ராஜ் வரை (260 கி.மீ.)

கட்டம் II: பிரயாக்ராஜ் முதல் வாரணாசி வரை (205 கி.மீ.)

கட்டம் III: வாரணாசி முதல் பக்சார் வரை (150 கி.மீ.)

கட்டம் IV:  பக்சார்  முதல் பாட்னா வரை (150 கி.மீ.)

கட்டம் V: பாட்னா முதல் ஃபராக்கா வரை (230 கி.மீ.)

கட்டம் VI: ஃபராக்கா  முதல் கொல்கத்தா வரை (205 கி.மீ.)

பயணத்தின் போது, ​​இந்த மாணவர்கள் உள்ளூர் என்சிசி குழுக்களுடன் இணைந்து ஆற்றங்கரைகளை சுத்தம் செய்து பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதன் மூலம் 'தூய்மை இந்தியா' முயற்சிக்குப் பங்களிப்பார்கள். இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியங்களை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவர்கள்வீதி நாடகங்களைநிகழ்த்துவார்கள்.

****** *****

SMB/ KV

 

 

 

 

 


(Release ID: 2066500) Visitor Counter : 60