ஊரக வளர்ச்சி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நகர்ப்புற நிலப் பதிவேடுகளுக்கான ஆய்வு-மீளாய்வுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேசப் பயிலரங்கை மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான், 2024, அக்டோபர் 21 அன்று புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்.

Posted On: 20 OCT 2024 11:26AM by PIB Chennai

 

நகர்ப்புற நிலப் பதிவேடுகளுக்கான ஆய்வு-மறு ஆய்வுக்கான நவீன தொழில்நுட்பங்கள் குறித்த சர்வதேசப் பயிலரங்கை  புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் திரு  சிவராஜ் சிங் சவுகான், 2024 அக்டோபர் 21 அன்று தொடங்கி வைக்கிறார். 2024, அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் " நகர்ப்புற நிலப் பதிவுகளில் ஆய்வு- மறு ஆய்வுக்கான நவீன தொழில்நுட்பங்கள்" என்ற தலைப்பில் இரண்டு நாள் சர்வதேசப் பயிலரங்கம் நில வளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய  ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நில வளத் துறை, மத்தியத் துறைத் திட்டமான டிஜிட்டல் இந்தியா நில ஆவணங்கள்  நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் நிலப் பதிவேடுகளை நவீனமயமாக்க மத்திய அரசின் 100% நிதியுதவியுடன்  01.04.2016 முதல் முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது. கிராமப்புற நிலப் பதிவேடுகளை நவீனமயமாக்குவதில் பெற்ற கணிசமான அனுபவத்துடன், இத்துறை இப்போது நகர்ப்புற நிலப் பதிவேடுகளை உருவாக்குவதிலும் நெறிப்படுத்துவதிலும் தனது கவனம் செலுத்துகிறது.

மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள், அனைத்து 36 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் வருவாய் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை செயலாளர்கள், சர்வதேச வல்லுநர்கள், தொழில்நுட்ப வழங்குநர்கள் உட்பட தொடர்புடைய பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை இந்தப் பயிலரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நகர்ப்புற நிலப்பதிவை நவீனமயமாக்கல், தற்போதைய தொழில்நுட்பத் தீர்வுகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்ப்புறங்களுக்கு முன்னோட்டத் திட்டமிடல் ஆகியவற்றில் உலகளாவிய சிறந்த நடைமுறைகளை வெளிப்படுத்தும். கூடுதலாக, இந்த பயிலரங்கு தரப்படுத்தல் குறைபாடு, தரவு பாதுகாப்பு, பங்குதாரர்களுக்கான திறன் மேம்பாடு போன்ற சவால்களை எதிர்கொள்ளும், அதே நேரத்தில் அரசு அதிகாரிகள், வல்லுநர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்களிடையே செயல்படக்கூடிய கொள்கை பரிந்துரைகளை உருவாக்க ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்பங்குதாரர் தொழில் நிறுவனங்களின்   ட்ரோன்கள், விமானம்; ஜிஐஎஸ் மற்றும் எம்ஐஎஸ்மென்பொருள்  கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .

2024, அக்டோபர் 21 அன்று, சிங்கப்பூர், தென் கொரியா, பிரிட்டன், ஸ்பெயின், நெதர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஃபிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களின் விளக்கக்காட்சிகள் டிஜிட்டல் நிலப் பதிவேடுகளில் சிறந்த நடைமுறைகளை எடுத்துக்காட்டும். இந்திய மற்றும் சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறும்.

2024, அக்டோபர் 22  அன்று, நிகழ்ச்சி நிரலில் ஆய்வுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு அமர்வுகள் உள்ளன. முதல் அமர்வில், டிஜிட்டல் நில மேலாண்மை, நில அளவீடு, நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள், பாதுகாப்பான நிலப் பதிவேடுகளின் துறையில் மேம்பட்ட மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் விவாதங்கள் இடம்பெறும்இரண்டாவது அமர்வின் முக்கியத்துவம் சொத்து வரிவிதிப்பு மற்றும் நகர்ப்புற திட்டமிடல் ஆகியவற்றிற்கான இடஞ்சார்ந்த தரவுகளைப் பயன்படுத்துவதாகும்.

மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத் துறை இணையமைச்சர் டாக்டர் சந்திர சேகர் பெம்மாசானியின் நிறைவுரையுடன் பயிலரங்கம் நிறைவடையும்.

*****

SMB/ KV

 

 

 

 



(Release ID: 2066493) Visitor Counter : 23


Read this release in: English , Urdu , Hindi