சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் 21-வது திவ்ய கலா மேளாவை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கிவைத்தார்
Posted On:
19 OCT 2024 8:47PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட 21-வது திவ்ய கலா மேளா, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் 2024 அக்டோபர் 17 முதல் 27 வரை நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார், மத்தியப் பிரதேச சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திரு நாராயண் தாஸ் குஷ்வாஹா மற்றும் ஜபல்பூர் சட்டமன்ற உறுப்பினர் திரு அசோக் ரோஹானி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய மற்றும் மத்தியப் பிரதேச அரசுகளின் மூத்த அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் இணைச் செயலாளர் திரு ராஜீவ் சர்மா, தேசிய மாற்றுத் திறனாளிகள் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் திரு நவீன் ஷா, ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் திரு தீபக் குமார் சக்சேனா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
மாற்றுத்திறனாளி தொழில்முனைவோர் தங்கள் தயாரிப்புகள், திறமைகள் மற்றும் திறன்களை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான தளத்தை வழங்குவதால், உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டிற்கு இந்த மாபெரும் நிகழ்வு ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டாகும். சுமார் 100 அரங்குகளுடன், தற்சார்பை ஊக்குவிப்பதற்கும், வணிக முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ' உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுத்தல்' தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மாற்றுத்திறனாளிகளின் தாக்கத்தை விரிவுபடுத்துவதற்கும் இந்தக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் வீரேந்திர குமார், 2022-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதிலிருந்து, திவ்ய கலா மேளாவின் மிகப்பெரிய வெற்றியைப் பற்றி தெரிவித்தார், நாடு முழுவதும் 20 க்கும் மேற்பட்ட கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன, இதில் பங்கேற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டித் தந்தது. மேலும், 25.10.2024 அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=2066409®=3&lang=1
********************
BR/KV
(Release ID: 2066463)
Visitor Counter : 41