பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
மத்திய பணியாளர் நலத்துறை, பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்குடன் மத்திய தகவல் ஆணையர் சந்திப்பு
प्रविष्टि तिथि:
19 OCT 2024 5:25PM by PIB Chennai
மத்திய பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், பொது மக்கள் குறைதீர்ப்புத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை தலைமைத் தகவல் ஆணையர் திரு ஹீராலால் சமாரியா இன்று (19.10.2024) சந்தித்தார்.
நடப்பு நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு 100% தீர்வு விகிதத்தை மத்திய தகவல் ஆணையம் எட்டியுள்ளது என்று திரு ஹீராலால் சமாரியா கூறினார். இந்த சாதனைக்காக மத்திய தகவல் ஆணையத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் பாராட்டினார்.
தகவல் அறியும் உரிமை மேல்முறையீடுகளை விசாரிப்பதற்கும் தீர்வு காண்பதற்கும் சிஐசி அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறையை நேரடி மற்றும் வீடியோ கான்பரன்சிங்கில் தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து தலைமை தகவல் ஆணையர் அமைச்சருக்கு விளக்கினார். கொவிட் 19 தொற்றுநோய் காலத்தில் தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களுக்கு தகவல் வழங்க இணையதள தொழில்நுட்பங்கள் காரணமாக அதிகம் தகவல் வழங்கப்பட்டது என்று ஆணையர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
தற்போது தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களை மொபைல் ஆப் உதவியுடன் தாக்கல் செய்யலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்றும் இது நிலுவையில் உள்ள விண்ணப்பங்களை விரைவாக தீர்க்க வழிவகுக்கிறது என்றும் அவர் கூறினார். தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன என்று ஆணையர் தெரிவித்தார்.
நாட்டின் எந்தப் பகுதியிலிருந்தும் அல்லது வெளிநாட்டிலிருந்தும் பகல் அல்லது இரவு எந்த நேரத்திலும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை மின்னணு முறையில் தாக்கல் செய்வதற்காக 24 மணி நேர இணையதள சேவை அறிமுகப்படுத்தப்பட்டது என்று மத்திய இணை அமைச்சர் திரு ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
அரசின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, மக்களின் பங்கேற்பு ஆகியவை குறித்த பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு மத்திய தகவல் ஆணையத்தின் பங்கு முக்கியமானது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் வலியுறுத்தினார்.
*****
PLM/ KV
(रिलीज़ आईडी: 2066386)
आगंतुक पटल : 104