குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
புதுதில்லியில் "காதி: சுதந்திரத்தின் துணி, நாகரிகத்தின் மொழி" என்ற கருப்பொருளில் கண்காட்சியை கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார் தொடங்கி வைத்தார்
Posted On:
19 OCT 2024 3:58PM by PIB Chennai
காதி, கிராமத் தொழில்கள் ஆணையமான கேவிஐசி-யின் தலைவர் திரு மனோஜ் குமார், புதுதில்லியில் இந்தியா சர்வதேச மையத்தின் (IIC) இயக்குநர் திரு. கே.என். ஸ்ரீவஸ்தவா முன்னிலையில், "காதி: சுதந்திரத்தின் துணி, நாகரிகத்தின் மொழி" என்ற கருப்பொருளின் அடிப்படையில் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். காதிக்கான உயர் சிறப்பு மையம் (COEK -சிஓஇகே), தேசிய ஆடை வடிவமைப்புத் தொழில்நுட்ப நிறுவனம் (NIFT) ஆகியவற்றுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, இந்தியாவின் சுதந்திர இயக்கத்தின் போது கையால் நூற்கப்பட்ட துணியின் பயணத்தை ஆராய பார்வையாளர்களை அழைக்கிறது.
இந்த கண்காட்சியில், காதி ஆடைகள், புடவைகள், வீட்டு ஜவுளிகள் இடம்பெற்றுள்ளன.
அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேவிஐசி தலைவர் மனோஜ் குமார் , "தேசப்பிதா மகாத்மா காந்தி, 'ராட்டையால் இழுக்கப்படும் ஒவ்வொரு நூலிலும் நான் கடவுளைக் காண்கிறேன் என்று கூறியதைக் குறிப்பிட்டார். இந்த தத்துவத்தைத் தழுவி, காதி - கிராமத் தொழில்கள் ஆணையம், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், காதி கைவினைஞர்களின் வருமானத்தை அதிகரிக்க விற்பனை இயக்கங்கள், தேசிய - சர்வதேச கண்காட்சிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகிறது என அவர் குறிப்பிட்டார்.
புதுதில்லி காந்தி கில் மெமோரியல் பிளாசாவில் வரும் 22ம் தேதி வரை தினமும் காலை 11 மணி முதல் இரவு 07 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
*****
PLM/ KV
(Release ID: 2066361)
Visitor Counter : 49