மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
'நமது நிபுணர்களைக் கேளுங்கள்' தொடர் தொடங்கியது: டிஜிலாக்கர் அம்சங்கள் குறித்து மக்கள் விளக்கம் பெற்றனர்
प्रविष्टि तिथि:
19 OCT 2024 3:21PM by PIB Chennai
மின்னணு - தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் தேசிய மின்-ஆளுமை பிரிவு, அதன் பிரத்யேக நேரடி தொடரான 'நமது நிபுணர்களைக் கேளுங்கள்' (ஆஸ்க் அவர் எக்ஸ்பெர்ட்ஸ் - Ask our Experts) நிகழ்ச்சியின் தொடக்க அத்தியாயத்தை நேற்று (2024 அக்டோபர் 18) வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியது. இந்த தொடர் டிஜிலாக்கர் குறித்து விளக்குகிறது.
'நமது நிபுணர்களிடம் கேளுங்கள்'
'நமது நிபுணர்களைக் கேளுங்கள்' என்பது டிஜிட்டல் இந்தியாவின் யூடியூப் சேனலில் ( www.youtube.com/@DigitalIndiaofficial ) ஒளிபரப்பு செய்யப்படும் ஒரு தனித்துவமான வாராந்திர நேரடி நிகழ்ச்சியாகும். இது மக்களுடன் ஈடுபாட்டை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி அரசு அதிகாரிகள், பாட வல்லுநர்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதற்கான ஒரு தளத்தை வழங்குகிறது. மக்களுக்கு பல்வேறு டிஜிட்டல் இந்தியா முயற்சிகள் தொடர்பான கேள்விகளைக் கேட்கவும் சந்தேகங்களைத் தீர்க்கவும் இது வாய்ப்பளிக்கிறது.
இதன் முதல் அத்தியாயம் டிஜிலாக்கரில் கவனம் செலுத்தியது. இது முதன்மை மின்-ஆளுமை தளமாகும். இது மக்களுக்கு முக்கியமான ஆவணங்கள், சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் சேமிக்கவும், பகிரவும், சரிபார்க்கவும் பாதுகாப்பான கிளவுட் அடிப்படையிலான தீர்வை வழங்குகிறது. டிஜிட்டல் அம்சங்கள் மூலம் அதிகாரம் அளிக்கும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய அங்கமாக டிஜிலாக்கர் திகழ்கிறது.
இது குறித்து வல்லுநர்கள் ஒரு விரிவான விளக்கத்தை வழங்கினர். இந்த அமர்வில் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நேரலையில் இணைந்தனர். டிஜிலாக்கர் தளத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்து விளக்கம் கோரி பார்வையாளர்கள் ஆர்வத்துடன் நிபுணர்களிடம் நேரடியாக கேள்விகளை முன்வைத்தனர். இந்த நிகழ்ச்சி நல்ல வரவேற்பைப் பெற்றது.
முழு அத்தியாயத்தையும் இந்த இணைப்பில் காணலாம் : https://youtube.com/live/sewXtW1A31k
டிஜிட்டல் இந்தியா யூடியூப் சேனல்: https://www.youtube.com/@DigitalIndiaofficial
*****
PLM/ KV
(रिलीज़ आईडी: 2066343)
आगंतुक पटल : 103