சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய விளையாட்டு ஆணையத்தால் மேம்படுத்தப்பட்ட கோல்ஃப் மைதானம் மற்றும் பெண்கள் விடுதியை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா திறந்து வைக்கிறார்

Posted On: 18 OCT 2024 3:16PM by PIB Chennai

மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, வரும் 20-ம் தேதி, (ஞாயிற்றுக்கிழமை) திருவனந்தபுரத்தில் இந்திய விளையாட்டு ஆணையத்தின் இரண்டு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். மேம்படுத்தப்பட்ட சாய் திருவனந்தபுரம் கோல்ஃப் மைதானத்தை காலை 10 மணிக்கு அமைச்சர் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கு சுற்றுலா, பெட்ரோலியம், மற்றும் இயற்கை வாயு துறை இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி தலைமை தாங்குகிறார். கேரள அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு வி அப்துரஹிமான், கேரள அரசின் தலைமைச் செயலாளர் திருமதி சாரதா முரளீதரன், மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் திரு சுமன் பில்லா  உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 300 படுக்கைகள் கொண்ட பெண்கள் விடுதியை மதியம் 12 மணிக்கு அமைச்சர் திறந்து வைக்கிறார். மூன்று மாடி தங்கும் விடுதியின் மொத்த பரப்பளவு 7,470.60 சதுர மீட்டர். இந்த திட்டம் ரூ. 32.88 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டது.

***

PKV/AG/DL



(Release ID: 2066149) Visitor Counter : 18


Read this release in: English , Malayalam