அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

குஜராத்தின் அமராபூரில் இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் 10-வது பதிப்பு

Posted On: 18 OCT 2024 3:09PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின், தன்னாட்சி நிறுவனமான தேசிய புத்தாக்க அறக்கட்டளை (என்ஐஎப்) அக்டோபர் 17, 2024 அன்று காந்திநகரில் உள்ள அமராபூரில் இந்தியா சர்வதேச அறிவியல் விழாவுக்கு ஏற்பாடு செய்தது. 14 முதல் 18 வயதுக்குட்பட்ட பல்வேறு வயதுப் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்திய சர்வதேச அறிவியல் விழா (..எஸ்.எஃப்) ஒவ்வொரு ஆண்டும் நாட்டின் அறிவியல் சாதனைகளைக் கொண்டாடுவதுடன், ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை உருவாக்குகிறது. இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் 10-வது பதிப்பின் தொடர் நடவடிக்கைகள் நாடு முழுவதும் பொது நிறுவனங்களால் திட்டமிடப்பட்டுள்ளன.

ஐஐஎஸ்எப்-ன் 10-வது பதிப்பு, விஞ்ஞானிகள், தொழில்துறை தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை ஒன்றிணைத்து அறிவியலின் மாற்றும் சக்தியை ஆராயும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைவராக இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைக்கும் விவாதங்களுக்கு இந்த நிகழ்வு ஊக்கமளிக்கும்.

 

 இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு ஐஐஎஸ்எப்- ன் தோற்றம், 2015-ம் ஆண்டு முதல் அதன் பயணம், அதன் வழியில் பல்வேறு சாதனைகள் மற்றும் ஐஐஎஸ்எப் 2024 பற்றிய விவரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய தேசிய முதலீட்டு நிதியத்தின் இயக்குநர் டாக்டர் அரவிந்த் சி. ரானடே, இணையதளம், அச்சு, மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் செய்திக் கட்டுரைகள் போன்ற ஐஐஎஸ்எஃப் தொடர்பான பல்வேறு ஆதாரங்களை ஆராயுமாறும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதன் பல்வேறு நிகழ்ச்சிகள் குறித்து பரிச்சயம் பெறுமாறும் மாணவர்களை கேட்டுக் கொண்டார்.

அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் தங்கள் திறனை அடைய வாய்ப்புகளை வழங்கும். நவீன உள்கட்டமைப்பு மற்றும் இயற்கையுடன் இணக்கமான வளமான இந்தியாவை உருவாக்கும் ஐஐஎஸ்எஃப் 2024 இயக்கம் பற்றி அவர் மேலும் விரிவாக எடுத்துரைத்தார். இந்தியாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான யோசனை மற்றும் அடிப்படை காரணங்கள் குறித்தும் பேசப்பட்டது.

மாணவர் அறிவியல் கிராமம் போன்ற திட்டங்களில் பங்கேற்பதற்கான வசதி மற்றும் கேள்விகளுக்கு என்ஐஎஃப்- அணுகுமாறு மாணவர்களை ஊக்குவித்த அவர், செய்தியைப் பரப்புவதற்கு உதவுமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொண்டார்.

குஜராத் அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் குஜராத் பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மையத்தின் (ஜிபிஆர்சி) இணை இயக்குநர் டாக்டர் மாதவி ஜோஷியும் வரவிருக்கும் ஐஐஎஸ்எஃப் இல் தீவிரமாக பங்கேற்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார்.

என்..எஃப்-ன் சமீபத்திய கண்டுபிடிப்புகளை விளக்கும் கண்காட்சியும் இந்த நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

***

(Release ID: 2066043)

PKV/AG/RR



(Release ID: 2066091) Visitor Counter : 43


Read this release in: English , Manipuri , Urdu , Hindi