தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

'தரைவழி ஒளிபரப்பாளர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு' குறித்த ஆலோசனை அறிக்கையை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) வெளியிட்டுள்ளது

Posted On: 18 OCT 2024 2:58PM by PIB Chennai

'தரைவழி  ஒளிபரப்பாளர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு' குறித்த ஆலோசனை அறிக்கையை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று வெளியிட்டுள்ளது.

தொலைத்தொடர்பு சேவைகளுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு குறித்த தனது பரிந்துரைகளை டிராய் 19.11.2014 அன்று மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு அனுப்பியது, இதில் 'தரைவழி ஒளிபரப்பாளர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு' தொடர்பான சில பரிந்துரைகள் இருந்தன.

இது தொடர்பாக, 22.5.2024 தேதியிட்ட கடிதத்தில், தொலைத்தொடர்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பான பரிந்துரைகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கான வழிகாட்டுதல்கள் 30.11.2022 அன்று தகுதிவாய்ந்த அதிகாரியின் ஒப்புதலுடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்  கூறியது. தரைவழி ஒளிபரப்பாளர்களுக்கான டிராய் பரிந்துரைகளை ஆய்வு செய்தபோது, டிராய் பரிந்துரைகள் செய்யப்பட்ட சூழல் 2014 ஆம் ஆண்டுக்குப் பின் மாறியிருக்கலாம் என்றும், இதனைப் புதிதாக ஆராய வேண்டிய அவசியம் இருக்கலாம் என்றும் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம்  கருதியது. மேற்கூறிய கடிதத்தின் மூலம், டிராய் சட்டம், 1997 இன் பிரிவு 11 (1) (ஏ) இன் கீழ் "தரைவழி ஒளிபரப்பாளர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு" குறித்து  மறுஆய்வு மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் டிராய்க்கு கோரிக்கை விடுத்தது.

அதன்படி, பங்குதாரர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவதற்காக 'தரைவழி ஒளிபரப்பாளர்களுக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு' குறித்த ஆலோசனை அறிக்கை  வெளியிடப்படுகிறது. இந்த ஆலோசனை அறிக்கையை www.trai.gov என்ற டிராய் இணையதளத்தில் காணலாம். ஆலோசனை அறிக்கை மீதான எழுத்துப்பூர்வ கருத்துகள் 15.11.2024-க்குள் பங்குதாரர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன. எதிர் கருத்துகள் ஏதேனும் இருப்பின் 29.11.2024-க்குள் சமர்ப்பிக்கலாம். பங்குதாரர்கள் தங்கள் கருத்துகள் மற்றும் எதிர் கருத்துகளை, மின்னணு வடிவத்தில், advbcs-2@trai.gov.in, jtadv-bcs@trai.gov.in இல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 ஆலோசகர் (பி&சிஎஸ்) தீபக் சர்மாவை : +91-11-20907774 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2066034

*******

SMB/RR



(Release ID: 2066083) Visitor Counter : 26


Read this release in: English , Urdu , Hindi , Marathi