தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
கைத்தறித் துறையில் தொழில்நுட்ப முன்னேற்றத்தை எடுத்துக்காட்டும் வகையிலான கலாச்சார வழித்தடத்தை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம். சிந்தியா பார்வையிட்டார்
Posted On:
18 OCT 2024 10:57AM by PIB Chennai
தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஜோதிராதித்ய எம். சிந்தியா சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்- உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம் 2024 இல் பங்கேற்கும் ஆயிரக்கணக்கான சர்வதேச பிரதிநிதிகளுடன் இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் காட்சியைப் பகிர்ந்து கொள்வதற்காக பாரத மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள துடிப்பான கலாச்சார வழித்தடத்திற்கு நேற்று விஜயம் செய்தார். இந்த வழித்தடத்தில் ஜவுளி அமைச்சகம் மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள 14 அரங்குகளில் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நேர்த்தியான கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
கைத்தறித் துறையில் குறிப்பாக வடகிழக்கு பிராந்தியத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களையும் இந்த வழித்தடம் எடுத்துக்காட்டுகிறது. டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டி.பி.ஐ) மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப தலைமையை பிரதிநிதிகள் அனுபவிக்க முடியும், இது யு.பி.ஐ சேவைகள் மூலம் நிகழ்வின் போது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பணமில்லா பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
தொழில்நுட்ப பயன்பாட்டின் மற்றொரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சம், வடகிழக்கு கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்தின் எரி பட்டுக்கூடு "நாரிலிருந்து நவநாகரிகம்" மதிப்புச் சங்கிலியின் கண்டுபிடிப்புக்கான பிளாக்செயின் பயன்பாடு குறித்த ஆய்வாகும். இந்தக் கழகம், பிளாக்செயின் தொழில்நுட்பம் மற்றும் தனித்துவமான குளோனபிள் அல்லாத க்யூ.ஆர் குறியீடுகளைப் பயன்படுத்தி எரி பட்டுக் கூட்டை நிலையான இழையாக பயன்படுத்தி கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுக்கான டிஜிட்டல் பாஸ்போர்ட்டை உருவாக்கும் கைத்தறி துறைக்கான டிஜிட்டல் தயாரிப்பு பாஸ்போர்ட்டை வடிவமைத்து உருவாக்குகிறது. இந்த பாஸ்போர்ட் வெளிப்படைத்தன்மை, தடமறிதல் மற்றும் நம்பகத்தன்மையை வழங்குகிறது, நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதி செய்கிறது மற்றும் கைவினைஞர்கள் மற்றும் நெசவாளர்களின் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாக்கிறது.
கூடுதலாக, இந்த வழித்தடத்தில் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் வடகிழக்கு கைவினைப்பொருட்கள் மற்றும் கைத்தறி மேம்பாட்டுக் கழகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட மூன்று அரங்குகள், வடகிழக்கு மாநிலங்களின் கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்களைக் காட்சிப்படுத்துகின்றன. கலாச்சார வழித்தடத்தில் தேசிய விருது பெற்ற கைவினைஞர்கள் மற்றும் திறமையான கைவினைஞர்கள் இடம்பெற்றுள்ளனர்.
புதுதில்லியில் நடைபெற்று வரும்சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்- உலக தொலைத்தொடர்பு தரநிலைப்படுத்தல் கூட்டம் 2024 இன் ஒரு பகுதியான இந்த நிகழ்வு, இந்தியாவின் டிஜிட்டல் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, மேம்பட்ட தகவல்தொடர்பு தொழில்நுட்பங்களில் உலகளாவிய தலைமையாக மாறுவதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065979
***
BR/RR/KR
(Release ID: 2065997)