ஆயுஷ்
சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ் நடைபெற்று வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மத்திய ஆயுஷ் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ் ஆய்வு செய்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
17 OCT 2024 6:04PM by PIB Chennai
ஆயுஷ் அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு பிரதாப்ராவ் ஜாதவ், ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் தற்போதைய நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்து, சிறப்பு இயக்கம் 4.0 முன்முயற்சிகளை சீராக செயல்படுத்துவதை உறுதி செய்ய அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது, மத்திய ஆயுஷ் அமைச்சர் அதன் நோக்கங்களை அடைய திறம்பட செயல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். அரசு வளாகங்களில் தூய்மை, செயல்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஊக்குவிப்பதை இந்த சிறப்பு இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் இந்த இயக்கத்தில் உற்சாகத்துடன் பங்கேற்கின்றன என்று அவர் கூறினார்.
ஆயுஷ் அமைச்சகம் சிறப்பு இயக்கம் 4.0-ன் சாதனைகளுடன் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. தூய்மைபடுத்துதல், பணிச்சூழலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. இந்த நாடு தழுவிய இயக்கத்தில், ஆயுஷ் அமைச்சகம் நிலுவையில் உள்ள பல்வேறு பணிகளை அடையாளம் கண்டுள்ளது.
சிறப்பு பிரச்சாரம் 4.0 இன் கீழ் அதன் முயற்சிகளின் ஒரு பகுதியாக, ஆயுஷ் அமைச்சகம் 41 கண்டறியப்பட்ட இடங்களில் தூய்மை நடவடிக்கைகளை நிறைவு செய்தது. ரூ.51,876 வருவாய் ஈட்டியது. 932 காலாவதியான கோப்புகள் கழிக்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065866
***
IR/AG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2065888)
வருகையாளர் எண்ணிக்கை : 89