நிதி அமைச்சகம்
சம்பளம் பெறும் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ், சிறார்களின் பெயர்களில் வசூலிக்கப்பட்ட டிசிஎஸ் ஆகியவற்றை எளிதில் திரும்பப்பெறும் வகையில் வருமான வரி விதிகளில் மத்திய நேரடி வரி வாரியம் திருத்தம் செய்துள்ளது
Posted On:
17 OCT 2024 2:55PM by PIB Chennai
மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) சம்பளம் பெறும் ஊழியர்களுக்காக வருமான வரி விதிகளில் திருத்தம் செய்து அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, 1961-ம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் 192-வது பிரிவின் துணைப்பிரிவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
சம்பளம் பெறும் ஊழியர்களிடம் செய்யப்படும் வரிப் பிடித்தம் (டிடிஎஸ்), சிறார்களிடம் வசூலிக்கப்படும் வரி (டிசிஎஸ்) ஆகியவற்றை எளிதாக திரும்பப் பெறும் வகையில், இந்தத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
டிடிஎஸ் பிடித்தத் தொகையை திரும்பப் பெறுவதற்கு ஊழியர்கள் அதுதொடர்பான விவரங்களை, வரிப் பிடித்தம் செய்யும் நிறுவனத்தின் தலைவரிடம் அல்லது முதலாளியிடம் தெரியப்படுத்த வேண்டும்.
சிறார்களின் வருமானம் பெற்றோரின் வருவாயுடன் இணைக்கப்படும் போது, சிறார்களிடம் வசூலிக்கப்படும் டிசிஎஸ் வரியை, பெற்றோர் திரும்பப்பெற, விதிமுறையில் மற்றொரு திருத்தம் வகை செய்கிறது. இதுகுறித்த விரிவான விவரங்களை www.incometaxindia.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.
***
MM/PKV/KV/KR
(Release ID: 2065728)
(Release ID: 2065791)