மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மீன்வளத்துறை சிறப்பு முகாம் 4.0-ல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
Posted On:
16 OCT 2024 7:09PM by PIB Chennai
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மீன்வளத் துறை, தூய்மை, செயல்திறன் மற்றும் பொதுமக்கள் குறைகள் மற்றும் நிலுவையில் உள்ள குறிப்புகளை சரியான நேரத்தில் தீர்க்கும் வகையில் மத்திய நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத் துறையால் தொடங்கப்பட்ட சிறப்பு பிரச்சாரம் 4.0 -ல் தீவிரமாகப் பங்கேற்கிறது. அக்டோபர் 2 முதல் 31, 2024 வரை நடைபெறும் இந்தப் பிரச்சாரம் முக்கிய நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகிறது.
சிறப்பு பிரச்சாரம் 4.0 -ன் ஒரு பகுதியாக, புதுதில்லியில் உள்ள கிருஷி பவன் மற்றும் சந்தர்லோக் கட்டிடத்தில் அமைந்துள்ள அனைத்து கள அலுவலகங்கள் மற்றும் மீன்வளத் துறையின் அலுவலகம் ஆகியவற்றில் தீவிர தூய்மை பிரச்சாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த முன்முயற்சிகள் பணியிடங்களை ஒழுங்குபடுத்துதல், சுகாதாரமான நிலைமைகளை உறுதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்யும் பணிச்சூழலை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன.
தூய்மை இயக்கத்தில் காலாவதியான கோப்புகள், பயன்படுத்தப்படாத தளவாடங்கள் மற்றும் மின்னணு கழிவுகளை அகற்றுவதும் அடங்கும். இது அலுவலக இடத்தை சிறப்பாகப் பயன்படுத்த பங்களிக்கிறது. 2447 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, அவற்றில் 1383 கோப்புகள் களையெடுக்கப்பட்டன. 250 மின்மயக் கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, 58 கோப்புகள் முடித்து வைக்கப்பட்டன. கண்டறியப்பட்ட கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்த துறை அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
மீன்வளத்துறை தொடர்பாக பொதுமக்கள் குறைகள் தீர்க்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முக்கிய பிரமுகர்களின் குறிப்புகள் மற்றும் நிலுவையில் உள்ள நாடாளுமன்ற உறுதிமொழிகளை தீர்வு செய்வதையும் துறை துரிதப்படுத்தி வருகிறது. இணைச் செயலாளர் திரு சாகர் மெஹ்ரா மற்றும் இணைச் செயலாளர் திருமதி நீது பிரசாத் ஆகியோர் பிரச்சாரத்தின் நோக்கங்களை முழுமையாக நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்காக வழக்கமான மதிப்பாய்வுகள் மற்றும் பின்தொடர்வுகளுடன் பிரச்சார முன்னேற்றத்தை மேற்பார்வையிடுகின்றனர்.
சிறப்பு பிரச்சாரம் 4.0 இன் இலக்குகளை மேலும் மேம்படுத்த, இத்துறை தனது பணியாளர்களுக்கு உள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அனைத்து ஊழியர்களின் செயலூக்கமான பங்கேற்புடன், 31 அக்டோபர் 2024 க்குள் பிரச்சாரத்தின் நோக்கத்தை வெற்றிகரமாக அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
****
PKV/KV/KR
(Release ID: 2065650)
Visitor Counter : 35