விவசாயத்துறை அமைச்சகம்
வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை – இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சிறப்பு இயக்கம் 4.0
இடுகை இடப்பட்ட நாள்:
16 OCT 2024 5:32PM by PIB Chennai
மத்திய அரசின் வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை – இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் சிறப்புத் தூய்மை இயக்கம் 4.0-வை மிகுந்த உற்சாகத்துடன் மேற்கொண்டு வருகிறது. முக்கிய பிரமுகர்கள் தெரிவித்த பரிந்துரைகள், பொதுமக்களின் கோரிக்கைகள் அடங்கிய கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு காகிதம் மற்றும் மின்னணு கோப்புகளைக் குறைக்கும் பணியை 2024 அக்டோபர் 1–ம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறது.
இந்த சிறப்புத் தூய்மை இயக்கத்தின் மூலம் கோப்புகள் அழிக்கப்பட்டதால் பெருமளவு இடம் காலியாகி இருப்பதுடன் வருவாயும் ஈட்டப்பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துக்கு உட்பட்ட நிறுவனங்களின் உட்புறத்திலும் வெளிப்புறத்திலும் தூய்மையைப் பராமரிப்பதற்கான முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
----
MM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2065567)
வருகையாளர் எண்ணிக்கை : 90