சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தேசிய பாதுகாப்புப் படையின் 40-வது உதய தினத்தையொட்டி துணிச்சலான வீரர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பு முயற்சிகளுக்கு மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி பாராட்டு
Posted On:
16 OCT 2024 11:37AM by PIB Chennai
தேசிய பாதுகாப்புப் படையின் 40-வது உதய தினமான இன்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி, துணிச்சலான வீரர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்படும் முயற்சிகளைப் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக 'எக்ஸ்' தளத்தில் திரு கட்கரி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது
தேசிய பாதுகாப்புப் படையின் 40-வது உதய தினத்தில், நமது துணிச்சலான வீரர்களின் வீரம், அர்ப்பணிப்பு மற்றும் அசைக்க முடியாத ஊக்கத்துக்கு நாம் வணக்கம் செலுத்துகிறோம். அவர்களின் அயராத முயற்சிகள் நமது தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. அனைத்து அச்சுறுத்தல்களிலிருந்தும் இந்தியாவைப் பாதுகாப்பதில் அவர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பை நாம் மதிக்கிறோம். ஜெய் ஹிந்த்!
***
(Release ID: 2065219)
PKV/KR
(Release ID: 2065267)
Visitor Counter : 45