குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

தியாகி இஹடாடென் அப்தெல்ஹஃபிட் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், குடியரசுத்தலைவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது

Posted On: 15 OCT 2024 7:54PM by PIB Chennai

அல்ஜீரியாவின்தியாகி இஹடாடென் அப்தெல்ஹஃபிட் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், இன்று (அக்டோபர் 15, 2024)  இந்தியக் குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்முவுக்கு அரசியல் அறிவியலில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

 

நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், தனிநபர் என்ற முறையில் இந்தியாவுக்குக் கிடைத்த கவுரவம் என்பதை விட இந்தியாவுக்கே இது பெருமை என்று கூறினார். இந்த கௌரவத்திற்காக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்திற்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

கல்வி என்பது தனிநபர் அதிகாரமளித்தலுக்கான சாதனம் மட்டுமல்ல, தேசிய வளர்ச்சிக்கும் அவசியமானது  என்று குடியரசுத்தலைவர் கூறினார். மாணவர்களை அறிவுசார்  குடிமக்களாக உருவாக்கவும், இந்தியாவை 'அறிவுசார் பொருளாதாரத்திற்கு' கொண்டு செல்லவும், இந்திய அரசு கல்வித் துறையில் பல சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 இன் குறிக்கோள் அனைத்து மட்டங்களிலும் கல்வி முறையை மாற்றுவதாகும். வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன் ஒத்துழைப்பதற்கான வழிகளுக்கும் இந்தக் கொள்கை வித்திடுகிறது.

 

மேற்கத்திய கல்வி நிறுவனங்களின் செலவில் மிகக் குறைந்த செலவில் இந்தியா தரமான கல்வியை வழங்குவதாகவும், ஆப்பிரிக்க மாணவர்களுக்கு பல்வேறு உதவித்தொகைகள் மற்றும் ஃபெல்லோஷிப்புகளை வழங்குவதாகவும் குடியரசுத்தலைவர் கூறினார். இந்திய அரசின் பல்வேறு முன்முயற்சிகளை அல்ஜீரியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள், அரசுத் துறைகள் மற்றும் இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

 

இந்தியா-அல்ஜீரியா இடையேயான உறவுகள் அவற்றின் திறனை அடைவதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்தியா மற்றும் அல்ஜீரியா இளைஞர்கள் இந்த இலக்கை அடைவார்கள் என்றும், மக்களுக்கு இடையேயான நமது வலுவான உறவுகளை மேம்படுத்துவதற்கான பாலமாக அவர்கள் மாறுவார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

குடியரசுத்தலைவர், நாளை, மவுரித்தேனியாவுக்கு புறப்படுவார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2065114



(Release ID: 2065248) Visitor Counter : 8