நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுற்றுச்சூழல் அம்சங்களில் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களைத் தடுப்பது மற்றும் முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளது

Posted On: 15 OCT 2024 3:00PM by PIB Chennai

பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் நலனைப் பாதுகாக்கும் நோக்கில்,    சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை முறைப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய நுகர்வோர்  பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ளதாக, அந்த ஆணையத்தின் முதன்மை ஆணையரும், மத்திய அரசின் நுகர்வோர் ஆவிவகாரங்கள் துறை செயலாளருமான திருமதி நிதி கரே புதுதில்லியில் இன்று (15.10.2024) தெரிவித்துள்ளார்.

இந்த  வழிகாட்டு நெறிமுறைகள், சுற்றுச் சூழல் விவகாரங்களில் உண்மையான மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளை பின்பற்றுவதை ஊக்குவிப்பதுடன், நுகர்வோரின் நம்பிக்கையை மேம்படுத்தி, நீடித்த வர்த்தக செயல்முறைகளை ஊக்குவிக்கவும் வகை செய்வதாக உள்ளன. 

இதன்படி, சுற்றுச்சூழல் தாக்கம் தொடர்பாக தொழில்துறையின் மற்றும் நுகர்வோர் ஆகியோர் இருதரப்பினருக்கும் பொதுவான புரிதலை உருவாக்குவதாக இந்த நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.  தயாரிப்பாளர்கள் மற்றும் சேவை வழங்குவோர், சுற்றுச் சூழல் தாக்கம் தொடர்பாக நம்பகமான ஆதாரத்தை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். அதாவது, விளம்பரங்களில் தெரிவிக்கப்படும் விவரங்கள், உண்மையானவை என்பதை நிரூபிக்கத் தேவையான தகவல்கள் மற்றும் தயாரிப்பு முறை குறித்த விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இந்த வழிகாட்டு நெறிமுறையில் இடம் பெற்றுள்ளன. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2064963

***

MM/KPG/DL



(Release ID: 2065047) Visitor Counter : 22