குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ஜெய்ப்பூர் பிர்லா அரங்கத்தில் சர்வதேச பட்டயக் கணக்காளர் மாநாட்டின் தொடக்க விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் ஆற்றிய உரை

Posted On: 15 OCT 2024 3:07PM by PIB Chennai

உங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்,

உங்கள் சகோதரத்துவத்துடன் எனக்கு நீண்டகால தொடர்பு உள்ளது, நான் உங்களில் ஒருவன்.

உங்கள் மத்தியில் இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்க விதிக்கப்பட்டுள்ள  சக்திவாய்ந்த குழுவினரிடையே உரையாற்றுவதை நான் ஒரு பெரிய பாக்கியமாகவும் கவுரவமாகவும் கருதுகிறேன்.

மதிப்பிற்குரிய பிரமுகர்களே, மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, இங்கு கூடியிருக்கும் ஒவ்வொருவருக்கும் வணக்கம்.

தொடக்க அமர்வில் பங்கேற்பதும், உங்களுடன் இணைவதும் என்பது தேசத்தின் பொருளாதாரத்துடன், தேசத்தின் தொழில்துறையுடன், தேசத்தின் வர்த்தகத்துடன், தேசத்தின் தொழில் வல்லுநர்கள் மற்றும் முக்கியமானவர்களுடன் ஒரு தொடர்பை உருவாக்குவது போன்றது. இந்த அரிய வாய்ப்புக்கு நன்றி.

பட்டயக் கணக்காளர்கள் வெளியில் தெரியாத அதிகம் அறியப்படாத ஹீரோக்கள், ஆனால் இப்போது அவர்களின் இருப்பு உணரப்படுகிறது.  கடந்த காலக் கதைகள் அதிக ஓசையுடன்  சத்தமாக வருகின்றன, தேசத்தின் பெரிய நன்மைக்காக நம் காதுகளில் எதிரொலிக்கின்றன. எங்கள் வளர்ச்சிப் பாதையில் உள்ள பங்குதாரர்களை நீங்கள் மிகவும் பொருத்தமானவர்களாகவும் பொறுப்புள்ளவர்களாகவும் ஆக்குகிறீர்கள். விரைவான உலகமயமாக்கல் சகாப்தத்தில், பொருளாதார இணைப்பு இன்றியமையாதது. உங்கள் பயிற்சி, உங்கள் அறிவு மற்றும் அனுபவத்தின் காரணமாக, நீங்கள் ஒரு உண்மையான பாலமாகவும், நிதி நேர்மையின்  பாதுகாவலர்களாகவும் திகழ்கிறீர்கள்.

வெளிப்படைத்தன்மை என்பது ஒரு சட்டரீதியான தேவை, ஒரு சடங்கு சம்பிரதாயம் மட்டுமல்ல. சிறந்த நிதி ஆலோசனைகள் மற்றும் நுண்ணறிவுகளை வழங்குவதன் மூலம் நமது நிதி அமைப்புகள் மீதான நம்பிக்கையின் அடித்தளமாக இது உள்ளது, மேலும் இளம் தொழில்முனைவோருக்கு கைகொடுப்பதன் மூலம் நீங்கள் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்பதை நான் அறிவேன். தகவலறிந்த முடிவுகளை எடுக்க வணிகங்களுக்கு நீங்கள் உதவுகிறீர்கள், சில நேரங்களில் அவை புதுமையான முடிவுகளாக இருக்கின்றன. நீங்கள் அவர்களிடம் ஒரு எதிர்கால கண்ணோட்டத்தை உருவாக்குகிறீர்கள், இதனால் நீங்கள் வளர்ச்சி மற்றும் புதுமைகளுக்கான கிரியா ஊக்கிகளாக செயல்படுகிறீர்கள், இவை இரண்டும் நிர்வாகத்தின் நல்ல தூண்கள்.

இந்தியாவின் குறிப்பிடத்தக்க பொருளாதார பயணம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. நாம் அதிவேக பொருளாதார எழுச்சியைக் கொண்டுள்ளோம், தேசத்தை ஐந்தாவது பெரிய உலகப் பொருளாதாரமாக உயர்ந்துள்ளோம். ஜெர்மனி மற்றும் ஜப்பானுக்கு முன்னால் மூன்றாவது இடமாக மாறும் வழியில் இருக்கிறோம், ஆனால் நமது இலக்கு மிகவும் வித்தியாசமானது, பிரதமர் தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். நாம் ஒரு வளர்ந்த நாடாக இருக்க வேண்டும், வளர்ந்த நாடு என்றால் என்ன என்பதை இங்குள்ள இந்த வகை மக்களை விட வேறு யாரும் சிறப்பாக அறிந்திருக்க முடியாது.

இந்தச் சவால் மிகப்பெரியது, ஆனால் அடையக்கூடியது, மனித வளத்தில் நமது நிபுணத்துவம் மற்றும் நமது தனிநபர் வருமானத்தை எட்டு மடங்கு அதிகரிப்பதன் மூலம் ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். இந்தச் சவாலை நாம் நிச்சயம் சந்திப்போம்.

உலக வங்கியின் எளிதாக வர்த்தகம் செய்யும் தரவரிசையில் நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளோம். இது பல்வேறு பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். அவற்றில் முக்கியமானவர்கள் பட்டயக் கணக்காளர்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

அன்பான நண்பர்களே, உலகிலேயே 5,000 ஆண்டுகள் பழமையான நாகரிக நெறிமுறைகளைக் கொண்ட ஒரே நாடு நமது நாடு.  நன்னெறி என்பது நமது ரத்தத்தில் ஊறியது, நன்னெறி என்பது நமது டி.என்.ஏ. கணக்கியல் மற்றும் தணிக்கையில் உள்ள நன்னெறிகள் நம்பிக்கையின் அடித்தளம் என்பதையும், நன்னெறி நடைமுறைகளில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பைக் கோருகின்றன என்பதையும் என்னைவிட நீங்கள் அறிவீர்கள். அதில் அளவுத்திருத்தம் இருக்க முடியாது, அது 100% இருக்க வேண்டும். இது விருப்பமல்ல, ஒரே வழி.

இந்த டிஜிட்டல் யுகத்தில், செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், இயந்திர கற்றல், தரவு பகுப்பாய்வு மற்றும் சீர்குலைக்கும் தொழில்நுட்பங்களாக நாம் இணைக்கும் பிற தொழில்நுட்பங்கள் சுட்டிக்காட்டப்பட்டபடி கணக்கியல் மற்றும் தணிக்கையின் நிலப்பரப்பு வேகமாக உருவாகி வருகிறது. இந்த முக்கியமான அம்சத்தில் கவனம் செலுத்தும் நாடுகளில் ஒற்றை இலக்கத்தில் இந்தியா உள்ளது என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.

செயற்கை நுண்ணறிவை நாம் சிறைப்பிடிக்காமல் கூண்டில் வைக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது சவால்கள் மற்றும் வாய்ப்புகள், இந்தச் சவால்களை நாம் வாய்ப்புகளாக மாற்ற வேண்டும். இந்த அமைப்பு இந்தத் திசையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

சர்வதேச நிதி அறிக்கையிடல் தரங்களுடன் இந்திய கணக்கியல் தரநிலைகளை ஒத்திசைத்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும், இதற்காக நான் உங்களைப் பாராட்டுகிறேன்.

முதலாவதாக, ஒரு கூட்டு, தேசியக் கண்ணோட்டமே பொருளாதார செழிப்பின் அடிப்படையாகும் என்று நான் வலியுறுத்துவேன். நீங்கள் அனைவரும் முதன்மையாக ஆர்வமாக இருப்பீர்கள் என்று நான் கருதுகிறேன், ஏனென்றால் இதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. நாம் பிரமிடு ஆக இருக்க முடியாது, நாம் பீடபூமியாக இருக்க வேண்டும், அது நமது கலாச்சாரம். அனைவரையும் நம்முடன் அழைத்துச் செல்கிறோம். அதனால்தான் ஜி20-ல் நாம் ஒரே உலகம், ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தாரக மந்திரத்தை வழங்கியுள்ளோம்.

இன்று, முன்னெப்போதையும் விட, நமது குடிமக்கள் தேசியவாதிகளாக இருக்க வேண்டும். தேச நலனை விட பாரபட்சமான நலன், தனிப்பட்ட நலன், நம்பிக்கைக்குரிய நலன், சுயநலம் இருக்கும் என்று இந்த நாட்டில் நாம் எப்படி கற்பனை செய்ய முடியும் அதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இந்தத் திசையில் நீங்கள் ஒரு பெரிய முன்னிலையை மிகவும் வெற்றிகரமாக எடுக்க முடியும்.

நண்பர்களே, மனித குலத்தில் ஆறில் ஒரு பங்கு மக்களின் தாயகமாகவும், நம்பமுடியாத மனித மேதைமைக்கு உலகில் பெயர் பெற்ற இடமாகவும் விளங்கும் பாரதத்தின் ஒரு குடிமகன் என்ற முறையில், குறுகிய பாகுபாடுகளை நாம் விட்டுவிட வேண்டியிருக்கும். தேசியவாத கண்ணோட்டம் கொண்ட ஒரு குடிமகனுக்கு பன்முகத்தன்மையைத் தழுவுவதில் எந்த சிரமமும் இருக்காது.  ஏனென்றால் அது நமது பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம்.

நமது சமூகம் பல நூற்றாண்டுகளாக  ஓரங்கட்டப்பட்டவர்கள், பாதிக்கப்படக்கூடியவர்கள், பலவீனமானவர்கள் ஆகியோருக்கு கைகொடுக்க அறியப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது ஆற்றலைப் பயன்படுத்திக் கொள்ளவும், கனவுகளை நனவாக்கிக் கொள்ளவும், விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும் அரசின் பல்வேறு திட்டங்கள் ஒரு சூழலை உருவாக்கியுள்ளன என்பது இதமளிக்கிறது. ஆனால் அதில் உங்களது பங்கும் மகத்தானது. இதுவரை நீங்கள் செய்ததைப் போலவே இதுவும் நிவர்த்தி செய்யப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் உரிமை இல்லை. இது உலகளாவியது, சிலர் தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்த ஒரு காலம் இருந்தது, அவர்கள் சலுகை பெற்றவர்கள்.

நான் குறிப்பாக உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன், ஏனென்றால் அதனை நீங்கள் மட்டுமே கையாள முடியும், அதுதான் பொருளாதார தேசியவாதம்.  தவிர்க்கக்கூடிய இறக்குமதிக்கு எந்த நிதி ஆதாயமும், அளவு எதுவாக இருந்தாலும், நியாயப்படுத்த முடியாது என்று நான் உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் சகோதரத்துவம் ஒரு பெரிய பங்கை வகிக்க முடியும், அது தேசத்திற்கு ஒரு பெரிய சேவையாக இருக்கும்.

நாட்டிற்கு வெளியே மூலப்பொருள் ஏற்றுமதி செய்யப்படும்போது உங்களை விட வேறு யாருக்கும் நன்றாகத் தெரியாது. உதாரணமாக, இரும்புத் தாது, பாரதீப் துறைமுகத்திற்குச் செல்கிறது. அதற்கு மதிப்பு சேர்க்கும் திறன் நம்மிடம் இல்லை என்பதை நாம் உலகிற்கு அறிவிக்கிறோம். மதிப்புக் கூட்டல் இல்லாமல் நமது மூலப்பொருட்கள் ஏன் இந்த நாட்டின் கரைகளைத் தாண்டிச் செல்ல வேண்டும் நாம் மதிப்பு கூட்டினால், நாம் நிச்சயமாக வேலைவாய்ப்பை உருவாக்குவோம், தொழில்முனைவு மலரும்.  நீங்கள் ஒரு பெரிய பங்கு வகிக்க வேண்டும். உங்களைத் தவிர அதை  வேறு யாரும் செய்ய முடியாது. நீங்கள் இன்னும் அதிகமாக சம்பாதிப்பீர்கள். உன்னதமான திருப்தியைப் பெறுங்கள், நீங்கள் தேச நலனுக்கு பங்களிப்பீர்கள்.

நண்பர்களே, இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும், அதை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இயற்கை வளங்களை அவர்கள் எவ்வாறு பயன்படுத்துவார்கள் என்பதை நமது பொருளாதார வலிமை, நமது நிதி வலிமை தீர்மானிக்கும் காரணியாக இருக்க முடியாது.

'தொழிலை ஒருங்கிணைத்தல்' தேவை. நாம் ஒத்திசைவில் இருக்க வேண்டும், நாம் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும். நாம் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாம் அனைவரும் பங்குதாரர்கள், ஏனென்றால் நாம் ஒன்றாக நீந்துகிறோம் அல்லது மூழ்குகிறோம், அந்த உணர்வு வர வேண்டும்.

பட்டயக் கணக்காளர்கள்தான் பெரிய மாற்றத்தின் மையமாக இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. நீங்கள் நம்பும் மாற்றத்தை உங்களால் கொண்டு வர முடியும். சட்ட மீறல்கள் எதுவும் நடக்காது என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. பட்டயக் கணக்காளர் வேறு வழியில் பார்க்காவிட்டால் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமையை நீர்த்துப்போகச் செய்ய முடியாது. நிர்வாகம் மற்றும் பங்குதாரர்களின்  வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். பங்குதாரர்களின் நம்பிக்கைஉங்கள் கைகளில் உள்ளது. நிர்வாகம் நெறிமுறைகளுக்கு நெருக்கமாக வைக்கப்படுவதைப் பார்ப்பது, உகந்த பயன்பாடு மற்றும் பங்குதாரர்களுக்கு சிறந்ததை வழங்குவது உங்கள் ஆணை, உங்கள் நியமனம், உங்கள் கடமை.

ஊழலை எதிர்த்துப் போராடுவதிலும், முறைகேடுகளைக் கண்டுபிடிப்பதிலும், கார்ப்பரேட் மோசடிகளைக் கண்டுபிடிப்பதிலும் உங்கள் பங்கு எந்த விசாரணை அமைப்புக்கும் அப்பாற்பட்டது. அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

வரி ஏய்ப்பு மற்றும் நிதி மோசடிகள், சிலருக்கு உதவக்கூடும், இப்போதெல்லாம் அவை யாருக்கும் உதவுவதில்லை. பண ஆதாயத்துக்காக மோசடி, ஊழல் செய்யும் இதுபோன்ற நபர்கள் கடினமான வழியில் பாடம் கற்றுக் கொள்வதைக் காண சட்டத்தின் நீண்ட கரங்கள் நாட்டிற்கு சேவை செய்ய அதிக ஆர்வத்துடன் செயல்படுகின்றன. நீங்கள் பாதுகாவலர்களாக இருக்கிறீர்கள். ஆகையால், இந்தக் கடமையிலிருந்து ஒரு கணம்கூட உங்களால் பின்வாங்க முடியாது. இது உங்கள் சட்டத்திலிருந்து வெளிப்படும் ஒரு கடமை அல்ல, இந்த நாட்டின் குடிமகனான உங்களிடமிருந்து அதன் கடமை வெளிப்படுகிறது.

இந்த மாபெரும் தேசத்தின் மிகவும் பொறுப்புள்ள குடிமக்களாக நான் உங்களை எடுத்துக்கொள்கிறேன். இந்தியா, பாரதம், ஒரு ஸ்திரப்படுத்தும் உலகளாவிய சக்தியாக உள்ளது. இந்த சக்தி உருவாக வேண்டும், இந்த நூற்றாண்டு பாரதத்திற்கு சொந்தமானதாக இருக்க வேண்டும், அது மனிதகுலத்திற்கு நல்லது, பூமியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கு பங்களிக்கும்.

நமது கலாச்சாரத்தைப் பாருங்கள், நமது உள்ளடக்கம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவை உறுதியான, நேர்மறையான சமூக ஒழுங்கின் அம்சங்கள், மிகவும் இனிமையானவை. நாங்கள் அனைவருக்கும் திறந்த கரங்களுடன் இருக்கிறோம்.

மாற்றத்தை உருவாக்கும் திறன் கொண்டவர்களுடன் என் மனதைப் பகிர்ந்து கொள்ளாவிட்டால், வாழ்க்கையில் மாறாதது மாற்றம் மட்டுமே என்றால், அனிச்சையான மாற்றத்தால் நாம் அனுமதிக்கப்படக் கூடாது. மாற்றத்தின் சிற்பியாக நாம் இருக்க வேண்டும். மாற்றத்தை நாம் எழுத வேண்டும்.

நாம் நம்பும் மாற்றத்தை ஏற்படுத்துவோம். நமது நாகரிக நெறிமுறைகளுக்கு ஏற்ற மாற்றத்தை நாம் விரும்புவோம். உங்கள் நேரத்திற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

மிக்க நன்றி.

முழுமையான உரைக்கு இந்த ஆங்கிலச்செய்திக்குறிப்பைக் காணவும் httpspib.gov.inPressReleasePage.aspxPRID=2064964

*** 

PKV/DL


(Release ID: 2065017) Visitor Counter : 50