பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
பிம்ஸ்டெக் நாடுகள் மற்றும் மாலத்தீவு நாடுகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு நல்லாட்சிக்கான தேசிய மையம் இரண்டு வார பயிற்சியை ஆரம்பித்துள்ளது
Posted On:
14 OCT 2024 2:42PM by PIB Chennai
நல்லாட்சிக்கான தேசிய மையம் (NCGG) பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (BIMSTEC) நாடுகளின் சிவில் ஊழியர்களுக்கான முதலாவது இடைக்கால தொழில் பயிற்சி திட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்த இரண்டு வார பயிற்சித் திட்டம், 2024 அக்டோபர் 14 முதல் 25 வரை முசோரி மற்றும் புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை, மியான்மர், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட பிம்ஸ்டெக் நாடுகளைச் சேர்ந்த 36 அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தில் பங்கேற்கின்றனர். இது தவிர, 34-வது திறன் மேம்பாட்டு திட்டத்தில் மாலத்தீவைச் சேர்ந்த 35 அரசு ஊழியர்கள் பங்கேற்கின்றனர். கோட்ட செயலாளர், கூடுதல் மாவட்ட செயலாளர், துணை முதன்மை செயலாளர் மற்றும் உதவி ஆணையாளர்கள், பணிப்பாளர், பேரவை செயல் அதிகாரிகள் என பல்வேறு பதவிகளில் இருப்பவர்கள் தத்தமது நாடுகளின் முக்கிய அமைச்சுக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.
தேசிய நல்லாட்சி மையத்தின் (என்சிஜிஜி) தலைமை இயக்குநரும், நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் செயலாளருமான திரு. வி. ஸ்ரீனிவாஸ் கூட்டாக பயிற்சித் திட்டத்தைத் தொடங்கி வைத்து பங்கேற்பாளர்களை வரவேற்றார். தனது உரையில், நிர்வாக சீர்திருத்தங்களின் வளர்ந்து வரும் நிலப்பரப்பு மற்றும் டிஜிட்டல் நிர்வாகத்தின் முக்கியப் பங்கை நிவர்த்தி செய்வதன் மூலம் அரசு ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தினார். குடிமக்களை மையமாகக் கொண்ட ஆளுகை மாதிரிகளில், இந்த பயிற்சி கவனம் செலுத்தும் என்று அவர் குறிப்பிட்டார், இது அரசு அலுவலகங்களுக்கும் அவை சேவை செய்யும் மக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதன் மூலம் பொதுச் சேவை வழங்கலை மேம்படுத்துகிறது.
நிகழ்ச்சியின் போது, பிம்ஸ்டெக் நாடுகளின் அரசு ஊழியர்களுக்கான முதலாவது இடைக்கால தொழில் பயிற்சித் திட்டத்தின் இணை பேராசிரியரும், என்.சி.ஜி.ஜி இணை பேராசிரியருமான டாக்டர் ஏ.பி.சிங், நல்லாட்சிக்கான தேசிய மையம் மற்றும் பல ஆண்டுகளாக என்.சி.ஜி.ஜி அடைந்த மைல்கற்கள் குறித்து, விரிவான தகவல்களை வழங்கினார். NCGG இணைப் பேராசிரியரும், மாலத்தீவு அரசு ஊழியர்களுக்கான 34-வது CBP-க்கான பாடநெறி ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் பி.எஸ். பிஷ்த் நிகழ்ச்சி விவரங்களை எடுத்துரைத்தார்.
இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ், பிம்ஸ்டெக் நாடுகள் மற்றும் மாலத்தீவுகளில் இருந்து பங்கேற்கும் அதிகாரிகள், இந்திரா காந்தி தேசிய வன அகாடமி, ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் ஐடிடிஏ, டேராடூனில் உள்ள ஸ்மார்ட் பள்ளி, ஹரியானா பொது நிர்வாக நிறுவனம், அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்) மற்றும் தேசிய அறிவியல் மையம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் மற்றும் திட்டங்களைப் பார்வையிடுவார்கள். மேலும், அவர்கள் மாருதி உத்யோக் லிமிடெட் மற்றும் தாஜ்மஹாலை பார்வையிட உள்ளனர்.
***
(Release ID: 2064639)
MM/AG/KR
(Release ID: 2064666)
Visitor Counter : 66