பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை மற்றும் நிலுவையிலுள்ள பணிகளைக் குறைப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ல் மத்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகள் பங்கேற்பு

Posted On: 14 OCT 2024 2:39PM by PIB Chennai

நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையை ஒருங்கிணைப்புத் துறையாகக் கொண்டு, மத்திய அரசால் தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0 குறிப்பிடத்தக்க வேகத்தை பெற்றுள்ளது. சிறப்பு இயக்கம் 4.0-க்கான ஆயத்த கட்டம் (16முதல்30செப்டம்பர், 2024) 30செப்டம்பர், 2024 அன்று நிறைவடைந்து மற்றும் செயல்படுத்தல் கட்டம் 2 அக்டோபர்2024 முதல் தொடங்கியது.

அக்டோபர் 11, 2024 அன்று நடைபெற்ற தூய்மை மற்றும் நிலுவையில் உள்ள விஷயங்களை தீர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் 4.0-ன் நோடல் அதிகாரிகளின் ஐந்தாவது கூட்டத்தில், இந்த இயக்கத்தின் முன்னேற்றம் மத்திய நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொது மக்கள் குறை தீர்வுத்துறை செயலாளரால் மதிப்பாய்வு செய்யப்பட்டதுஇந்த கூட்டத்தில், 84 அமைச்சகங்கள் / துறைகளைச் சேர்ந்த 150 மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். அனைத்து அமைச்சகங்கள் / துறைகள் சிறப்பு இயக்கம் 4.0-ல் பங்கேற்றன. பத்தே நாட்களில் 3.16 லட்சம் அலுவலகங்கள் என்ற இலக்கில், 1.32 லட்சம் அலுவலகங்களில் (42%) தூய்மை இயக்கங்கள் மேற்கொள்ளப்பட்டதன் மூலம், நாடு முழுவதிலுமிருந்து பெரும் பங்கேற்பு காணப்பட்டது.  26.41 லட்சம் சதுர அடி இடம் உற்பத்தி பயன்பாட்டிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது; பழைய பொருட்களை கழிவு செய்ததன் மூலம் ரூ.21.62 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதுடன், 1.34 இலட்சம் பொதுமக்களின் குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.

சிறப்பு இயக்கம் 4.0 சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க இழுவையைப் பெற்றுள்ளது, #SpecialCampaign4.0-ல் அமைச்சகங்கள் / துறைகளின் 5,002 ட்வீட்கள், 314 இன்போ கிராபிக்ஸ் மற்றும் 129 PIB அறிக்கைகளின் வெளியீடு.

ஆய்வுக் கூட்டத்தின் போது, பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை "வித்யாஞ்சலி" செயலி குறித்த உள்ளார்ந்த விளக்கக் காட்சியை வழங்கியது, இது கல்வித் தரத்தை மேம்படுத்துவதையும், கணினி அமைப்புகள் போன்றவற்றை நன்கொடையாக வழங்குவதை எளிதாக்குவதற்காக, வகுப்பறைகளில் அதிக ஊடாட்டத்தை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைச்சகங்கள் / துறைகளின் சிறப்பு இயக்கம் 4.0-ன் கீழ்.

 

11அக்டோபர், 2024 வரை வெளிவந்த சில சிறந்த நடைமுறைகள் பின்வருமாறு:

"ராமாயணம்" கையெழுத்துப் பிரதியைப் பாதுகாத்தல், ஆசியாடிக் சொசைட்டி, கொல்கத்தா, சுரங்க அமைச்சகம்

சாஸ்திரி பவன், சட்டமன்ற வளாக சுவர் அழகுபடுத்தல்

கல்வி அமைச்சகத்தின், தேசிய பால் பவன், பொழுதுபோக்கு அறையில் இருந்து கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டது

சாஸ்திரி பவன், சுரங்க அமைச்சகத்தின் கழிவு அறை DMF கேலரியாக மாற்றப்பட்டது.

நாக்பூர், சுரங்க அமைச்சகத்தின் ஜெஎன்ஏஆர்டிசிசி கழிவுகளிலிருந்து அலுமினியத்தால் செய்யப்பட்ட கலை சிற்பம்,

புனே விமான நிலையத்தில் ஏலம் விடப்பட்ட பின்னர் பழைய குளிரூட்டும் கோபுரங்களில் இருந்து பிரிக்கப்பட்ட கழிவுகள் அகற்றப்பட்டன

அஞ்சல் துறையின் சரியான நேரத்தில் சேவைகளை வழங்குவதற்கான போஸ்ட்மேன் செயலி, -அலுவலக தத்தெடுப்பு, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழுக்கான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.

***

(Release ID: 2064637)

MM/AG/KR


(Release ID: 2064661) Visitor Counter : 46


Read this release in: English , Urdu , Hindi