சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹைதராபாதில் உள்ள இந்தியப் புவியியல் ஆய்வுப் பயிற்சி நிறுவனத்தில் (ஜி.எஸ்.ஐ.டி.ஐ.யில்) மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையத்தை மத்திய அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி திறந்து வைத்தார்

Posted On: 12 OCT 2024 7:12PM by PIB Chennai

தூய்மையான மற்றும் பசுமையான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஹைதராபாதில் உள்ள இந்திய புவியியல் ஆய்வுப் பயிற்சி நிறுவனத்தில் (ஜிஎஸ்ஐடிஐ) மேற்கூரை சூரிய மின் உற்பத்தி நிலையத்தை மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி இன்று தொடங்கி வைத்தார். எம்.எஸ். கிருஷ்ணன் கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்வு, நீடிக்கவல்ல எரிசக்தியை ஊக்குவிப்பதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பில் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது.

அரசு நிறுவனங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கும் அதே வேளையில், ஜி.எஸ்..டி..யின் கார்பன் தடத்தை குறைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக  புதிய சூரிய சக்தி நிலையம் உள்ளது. ஒட்டுமொத்த எரிசக்தி தேவையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கை அதிகரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் பெரிய இலக்குக்கு பங்களிக்கும் வகையில், நிறுவனத்தின் எரிசக்தி தேவைகளில் கணிசமான பகுதியை இது உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள ஜி.எஸ்..டி..யில் கூரை சூரிய மின் நிலையத்தைத் திறந்து வைத்த மத்திய அமைச்சர் திரு  ஜி.கிஷன் ரெட்டி, நீடிக்கவல்ல எரிசக்திக்கான அதன் உறுதிப்பாட்டிற்காக நிறுவனத்தைப் பாராட்டினார், 'இது சுற்றுச்சூழல் பொறுப்பு, எரிசக்தி திறன் மற்றும் நிலையான வளர்ச்சியை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். பிரதமர் திரு நரேந்திர மோடி  தலைமையின் கீழ், மேற்கொள்ளப்படும் முன்முயற்சிகள் மூலம் பருவநிலை செயல்பாட்டில் இந்தியா உலகத் தலைவராக உருவெடுத்துள்ளது. ஜி.எஸ்..டி..யில் உள்ள 150 கிலோவாட் மேற்கூரை சூரிய சக்தி நிலையம், நிறுவனத்தின் ஆற்றல் தேவைகளில் 75% பூர்த்தி செய்யும், ஆண்டுக்கு ரூ .30 லட்சத்தை சேமிக்கும். பொது நிறுவனங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டிற்கான புதிய நிலையை உருவாக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியப் புவியியல் ஆய்வு நிறுவன (தென் மண்டலம்) கூடுதல் தலைமை இயக்குநர் திரு எஸ். டி. பட்பாஜே நிகழ்ச்சியில் உரையாற்றி, நீடித்த வளர்ச்சிக்கு இந்தத் திட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மல்கஜ்கிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஈடலா ராஜேந்தர், தேசிய முன்னேற்றத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் முக்கிய பங்கை எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் ஒரு மரக்கன்று நடப்பட்டது சூரிய சக்தி நிலையத்திற்கான தொடக்கக் கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது.

*******

SMB/ KV

 

 


(Release ID: 2064434) Visitor Counter : 53


Read this release in: English , Urdu , Hindi , Telugu