வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம்,  3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு சூழலை இது சிறப்பாக மாற்றியமைத்துள்ளது


பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டம் சரக்குப் போக்குவரத்துச் செலவைக் குறைத்து, சிறந்த சேவைகளை வழங்க வழிவகை செய்துள்ளது: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்


Posted On: 12 OCT 2024 3:57PM by PIB Chennai

 

 பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2021 அக்டோபர் 13 அன்று தொடங்கப்பட்ட பன்னோக்கு இணைப்பிற்கான பிரதமரின் தேசிய விரைவு சக்தி பெருந்திட்டம, நாட்டின் உள்கட்டமைப்புச் சூழலைச் சிறப்பாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க மைல்கற்களை அடைந்து மூன்று ஆண்டுகளை நிறைவு செய்கிறது.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்துப் பேசிய மத்திய வர்த்தகம் - தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், உள்கட்டமைப்புத் திட்டங்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்டம் ஒரு முன்னுதாரண மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது என்றார். பல்வேறு அமைச்சகங்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து தரவுகளை ஒருங்கிணைப்பதன் மூலம், மிகவும் திறன் வாய்ந்த, வெளிப்படையான, விளைவு சார்ந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். விரைவான திட்ட செயலாக்கம், குறைந்த சரக்குப் போக்குவரத்துச் செலவுகள், நாட்டின் ஒவ்வொரு மூலையையும் சென்றடையும் சிறந்த சேவைகள் ஆகியவற்றில் இதன் தாக்கம் காணப்படுகிறது என்று அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

உள்நாட்டு தொழில் வர்த்தக மேம்பாட்டுத் துறையான டிபிஐஐடி செயலாளர் திரு அமர்தீப் சிங் பாட்டியா கூறுகையில், பிரதமரால் 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திட்டம், புவிசார் தொழில்நுட்பத்தையும் ஒட்டுமொத்த அரசு அணுகுமுறையையும் பயன்படுத்தி உள்கட்டமைப்பு திட்டமிடல் மேம்பாட்டு செயல்முறையை துரிதப்படுத்தியுள்ளது என்றார். கடந்த மூன்று ஆண்டுகளில், 44 க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சகங்கள், 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் இணைந்துள்ளன என அவர் தெரிவித்தார்.

முக்கிய சாதனைகள்:

ஒரே தளத்தில் அரசு திட்டங்கள் ஒருங்கிணைப்பு : பிரதமரின் விரைவுசக்தி பெருந்திட்டம், 44 மத்திய அமைச்சகங்கள், 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை 1600 க்கும் மேற்பட்ட தரவு வகைகளுடன் ஒருங்கிணைத்துள்ளது. இது உள்கட்டமைப்பு திட்டங்களை திட்டமிடுவதற்கும் செயல்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான அம்சமாக அமைகிறது.

சமூகத் தாக்கம்: பிரதமரின் விரைவு சக்தியை சமூகத் துறை அமைச்சகங்களுக்கு விரிவுபடுத்தி, சமூக வளர்ச்சிக்காக PM இதன் பயன்பாட்டை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறதுஇது ஆரம்ப சுகாதாரம், கல்வி, அஞ்சல் சேவைகள், பழங்குடியினர் மேம்பாடு போன்றவற்றில் சிறந்த உள்கட்டமைப்பு திட்டமிடலுக்கு உதவியுள்ளது.

பிரதமரின் விரைவு சக்தி மாநில பெருந்திட்டங்கள்: அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களும் பிரதமரின் விரைவு சக்தி மாநில பெருந்திட்ட தளங்ளை உருவாக்கியுள்ளன.

ஏற்றுமதி, வர்த்தக வசதி: தேசிய சரக்குப் போக்குவரத்துக் கொள்கையுடன் முக்கியமான உள்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதிலும், சரக்குப் போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதிலும், இந்தியாவின் சரக்குப் போக்குவரத்துச் செயல்திறனை மேம்படுத்துவதிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உலக வங்கியின் சரக்குப் போக்குவரத்து செயல்திறன் குறியீட்டு அறிக்கை 2023 படி, இந்தியாவின் தரவரிசை 38 ஆக உயர்ந்துள்ளது. 2018-ம் ஆண்டில் 44 வது இடத்தில் இருந்தது. தற்போது இந்தியா ஆறு இடங்கள் முன்னேறியுள்ளது.

பிராந்திய பயிலரங்குகள்: கூட்டுறவுக் கூட்டாட்சி உணர்வைப் பின்பற்றி, கடந்த மூன்று ஆண்டுகளில், அறிவுப் பகிர்வு, சிறந்த நடைமுறைகள், மத்திய, மாநில அரசுகளின் திட்ட விளக்கம் ஆகியவற்றை எளிதாக்குவதற்காக அனைத்து 36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய ஐந்து பிராந்திய பயிலரங்குகள் நடத்தப்பட்டுள்ளன.

நிலையான தரவு: பிரதமரின் விரைவு சக்தியின் தரவு அணுகுமுறை புவிசார் தகவல் அடிப்படையிலான கருவிகளாலும் நிகழ்நேர கண்காணிப்பு அமைப்பாலும் இயக்கப்படுகிறது. இது விரைவான  தகவலறிந்த முடிவெடுக்க உதவுகிறது.

 

பயிற்சி, திறன் மேம்பாடு: டிபிஐஐடி அதிகாரிகளின் திறன்களை வளர்ப்பதற்காக பயிற்சி அளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாவட்டங்களுக்கு விரிவுபடுத்துதல்நவீன நகரங்களை உருவாக்குதல், தொழில்துறை வழித்தடங்களை உருவாக்குதல், நாட்டின் தொழில்துறை திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றில் இது முக்கிய பங்கு வகிக்கும்.

பிரதமரின் விரைவு சக்திப் பெருந்திட்டம் மூன்று ஆண்டுகளை கொண்டாடும் நிலையில், இந்தியாவின் தற்சார்பு பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இது முக்கிய பங்கு வகிக்கும்.

*****

PLM/ KV

 

 

 



(Release ID: 2064388) Visitor Counter : 40


Read this release in: English , Urdu , Hindi , Manipuri