பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற பதாகையின் கீழ் நாடு முழுவதும் சர்வதேசப் பெண் குழந்தைகள் தினம் 10 நாட்கள் கொண்டாடப்பட்டது
Posted On:
11 OCT 2024 4:52PM by PIB Chennai
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் 11 வரை 10 நாள் நாடு தழுவிய கொண்டாட்டத்திற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் என்ற பதாகையின் கீழ் அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் 10 நாள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன.
நாடு முழுவதும், சிறுமிகளின் உரிமைகள் பற்றிய விவாதங்கள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய புரிதலை மேம்படுத்துதல், அவர்களின் கல்வி மற்றும் அதிகாரமளித்தலை ஆதரிக்கும் முயற்சிகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் ஈடுபடுத்தின. மரக்கன்றுகள் நடும் இயக்கங்கள், பள்ளி செல்லும் திறமையான சிறுமிகளை கௌரவித்தல், "மகள்களுடன் செல்ஃபி" இயக்கங்கள், கன்னி பூஜை விழாக்கள், சுகாதார முகாம்கள், கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகள், சிறுமிகளிடையே சுறுசுறுப்பான பங்கேற்பு மற்றும் படைப்பாற்றலை ஊக்குவித்தல் ஆகியவை செயல்பாடுகளில் அடங்கும்.
சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி கருத்து தெரிவித்த மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி, "நமது பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் அளிப்பது ஒரு பொறுப்பு மட்டுமல்ல; இது பிரகாசமான எதிர்காலத்திற்கான நமது பார்வை. அவர்களின் உரிமைகள் மற்றும் திறனை அங்கீகரிப்பதன் மூலம், ஒவ்வொரு பெண்ணும் செழித்து வளரும் ஒரு சமத்துவ சமூகத்திற்கு வழி வகுக்க முடியும்" என்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2064191
***
SMB/DL
(Release ID: 2064255)
Visitor Counter : 46