பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியக் கடலோரக் காவல்படையின் ஏ.எல்.எச் எம்.கே -3-ன் காணாமல் போன விமானி உடல் ஒரு மாத கால தேடுதல் நடவடிக்ககைக்குப் பின் போர்பந்தர் கடற்கரையில் மீட்கப்பட்டது

प्रविष्टि तिथि: 11 OCT 2024 2:38PM by PIB Chennai

கடந்த மாதம் அவசரமாக தரையிறக்கப்பட்ட இந்தியக் கடலோரக் காவல்படையின் மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் எம்.கே -3-ன் காணாமல் போன விமானி கமாண்டன்ட் ராகேஷ் குமார் ராணாவின்  உடல் போர்பந்தர் கடற்கரையில் இருந்து தென்மேற்கே சுமார் 55 கி.மீ தொலைவில் மீட்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரின் பைலட்-இன்-கமாண்டாக இருந்த கமாண்டன்ட், மோட்டார் டேங்கர் ஹரி லீலாவில் இருந்து பலத்த காயமடைந்த குழு உறுப்பினரை வெளியேற்றும் பணியில்  ஒரு விமானி மற்றும் இரண்டு விமான பணியாளர்களுடன் ஈடுபட்டார்.

ஹெலிகாப்டர் 2024, செப்டம்பர் 02  அன்று அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது. அதன் பிறகு இந்திய கடற்படையுடன்  இந்தியக் கடலோரக் காவல்படை காணாமல் போன பணியாளர்களுக்காக  தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது. ஒரு குழுவினர் மீட்கப்பட்டனர், மற்ற மூன்று பேரின் இறந்த உடல்கள்  2024, செப்டம்பர் 03  அன்று மீட்கப்பட்டன. 70 க்கும் மேற்பட்ட விமானப் பயணங்கள் மற்றும் பல கப்பல்களின் ஈடுபாட்டிற்குப் பின், கமாண்டன்ட் ராகேஷ் குமார் ராணாவின் உடல் 2024, அக்டோபர் 10  அன்று மீட்கப்பட்டது .

இந்த வீரரின் உடல் ராணுவ மரபுப்படியும் கெளரவிப்புடனும் தகனம் செய்யப்படும்.

***

SMB/DL


(रिलीज़ आईडी: 2064254) आगंतुक पटल : 73
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी