மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், விலங்குகள் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவையை மத்திய அமைச்சர் திரு ஜார்ஜ் குரியன் தொடங்கி வைத்தார்
Posted On:
10 OCT 2024 3:46PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், கேரளாவின் கொச்சியில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் (CIAL) புதிதாக நிறுவப்பட்ட விலங்குகள் தனிமைப்படுத்தல் மற்றும் சான்றிதழ் சேவையை (AQCS) தொடங்கி வைத்தார். செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்களுக்கான வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுடன் இணைந்து, வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளை இறக்குமதி செய்வதை எளிதாக்குவதில் இந்த வசதி ஒரு குறிப்பிடத்தக்க படியாகும்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய இணையமைச்சர் திரு ஜார்ஜ் குரியன், கால்நடைகள், மீன்வளப் பொருட்கள் மற்றும் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடைமுறைகளை மேலும் மேம்படுத்த, சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை வரவேற்றார்.
இந்த முயற்சிக்கு ஆதரவாக, கொச்சின் சர்வதேச விமான நிலையம் 24 மணி நேர குளிரூட்டப்பட்ட செல்லப்பிராணி நிலையம், ஒரு பிரத்யேக சரக்குப் பிரிவு, ஒரு கால்நடை மருத்துவர், ஒரு சுங்க அனுமதி மையம் மற்றும் செல்லப்பிராணிகளுடன் வரும் பயணிகளுக்கான வசதி மையம் உள்ளிட்ட பல வசதிகளை நிறுவியுள்ளது. இந்தப் புதிய சேவை, செல்லப்பிராணியுடன் வரும் பயணிகளை ஆதரிப்பதிலும், கேரளாவில் விலங்கு மற்றும் மீன் பொருட்கள் தொடர்பான, ஒட்டுமொத்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறைகளை மேம்படுத்துவதிலும் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.
நிகழ்ச்சியின் போது, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் கூடுதல் செயலாளர் திருமதி வர்ஷா ஜோஷி, விலங்குகள் தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளை இயக்குவதற்காக கொச்சி சர்வதேச விமான நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். செல்லப்பிராணிகளுடன் வரும் பயணிகளுக்கு இந்த முடிவு பெரிதும் பயனளிக்கும் என்று சிஐஏஎல் நிர்வாக இயக்குநர் திரு எஸ் சுஹாஸ் கூறினார். இந்த கூட்டாண்மை, செயல்முறையை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, செல்லப்பிராணி உரிமையாளர்கள் மற்றும் பயணிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதன் மூலம், விலங்குகளை கேரளாவிற்குள் கொண்டு வருவதை எளிதாக்குகிறது.
மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம், இந்தியாவிற்குள் அயல்நாட்டு நோய்கள் அறிமுகப்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன், 2001-ம் ஆண்டில் திருத்தப்பட்ட 1898-ம் ஆண்டின் கால்நடை இறக்குமதிச் சட்டத்தின் கீழ், கால்நடை மற்றும் கால்நடை பொருட்களின் இறக்குமதியை ஒழுங்குபடுத்துகிறது. தற்போது, செல்லப்பிராணிகள் உட்பட உயிருள்ள விலங்குகள் ஏக்யூசிஎஸ் நிலையங்கள் அமைந்துள்ளன. ஆறு முக்கிய நுழைவு வாயில்கள் வழியாக இறக்குமதி செய்யப்படுகின்றன. தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு மற்றும் தற்போது, ஹைதராபாத். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இந்தப் புதிய வசதி உள்ளது. இந்த வசதி கேரளாவுக்கு விலங்குகளை இறக்குமதி செய்யும் செல்லப்பிராணி உரிமையாளர்களுக்கு செலவையும் சிரமத்தையும் குறைப்பதுடன், அவர்களுக்கு மிகவும் வசதியான வாய்ப்பை வழங்கும்.
---
MM/KPG/KR/DL
(Release ID: 2063877)
Visitor Counter : 49