புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி ஜெர்மனி பயணத்தை நிறைவு செய்தார்
Posted On:
09 OCT 2024 5:43PM by PIB Chennai
மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் திரு பிரல்ஹாத் ஜோஷி, 2024 அக்டோபர் 6-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை ஜெர்மனியில் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் உலகளாவிய நிலைத்தன்மை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டியது. எரிசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய விவாதங்களும் இந்தப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்டன.
2024 அக்டோபர் 07 அன்று, ஹம்பர்க் நிலைத்தன்மை மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர், தற்போது 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் ஆதரவைப் பெற்ற சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பை இந்தியா உருவாக்கியதை சுட்டிக் காட்டினார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையால், கடந்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று அவர் கூறினார்.
இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, திரு பிரலாத் ஜோஷி பல்வேறு நாடுகள் மற்றும் உலக அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். இந்த சந்திப்புகளின் போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை எரிசக்தி, போன்றவற்றில் கூட்டு ஒத்துழைப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி ஜெர்மனி அதிபர் திரு. ஓலாஃப் ஷோல்ஸுடனும் கலந்துரையாடினார்
ஜெர்மனியின் பெர்லினில் இந்திய வம்சாவளியினருடனும் மத்திய அமைச்சர் திரு பிரலாத் ஜோஷி கலந்துரையாடினார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில் ஒத்துழைப்பையும், இத்துறையில் இந்தியாவின் நிலையையும் மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டுடன் திரு பிரகலாத் ஜோஷியின் ஜெர்மனி பயணம் நிறைவடைந்தது. இந்தப் பயணத்தின் போது நடைபெற்ற சந்திப்புகளும், கலந்துரையாடல்களும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் வலுவான ஒத்துழைப்புக்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.
---
PLM/KPG/DL
(Release ID: 2063618)
Visitor Counter : 44