சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மனநல விழிப்புணர்வு வாரம் 2024-ன் தொடர்ச்சியான நடவடிக்கைகள்

Posted On: 09 OCT 2024 5:40PM by PIB Chennai

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் உள்ள தேசிய நிறுவனங்கள், மனநல விழிப்புணர்வு வாரம் 2024-ன் கீழ் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதில் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நடவடிக்கைகள் நாடு முழுவதும் மனநல விழிப்புணர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் அனைவருக்கும் மன நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் உள்ளடக்கிய சமூகங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

செஹோரில் உள்ள தேசிய மனநல மறுவாழ்வு நிறுவனம் 'பணியிடத்தில் மன ஆரோக்கியம்' என்ற கருப்பொருளில் ஒரு பிரத்யேக இயக்கத்தை நடத்துகிறது, ஆதரவான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை ஊக்குவிக்க பல பயிலரங்குகளை நடத்துகிறது. இந்த இயக்கம் தனிநபர்களின் மன நலனைப் பராமரிப்பதில் பணியிடங்கள் வகிக்கும் முக்கிய பங்கை சுட்டிக்காட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன், பணியிடங்களை மன ஆரோக்கியமானதாகவும் மாற்றுவதற்கான கூட்டு முயற்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறது.

செகந்திராபாத்தில் உள்ள அறிவுசார் குறைபாடுகள் உள்ள நபர்களுக்கு அதிகாரமளித்தலுக்கான தேசிய நிறுவனம், மனநலப் பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வை உருவாக்கி, ஊக்கமளிக்கும் பேரணியுடன் வாரத்தைத் தொடங்கியது.

இந்த முயற்சிகள் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை மற்றும் அதன் நிறுவனங்கள் மனநலம் குறித்த தேசிய உரையாடலை உருவாக்க செயல்படுகின்றன. அனைத்து தரப்பு மக்களையும் மனநலனை தீவிரமாக எடுத்துக் கொள்ள ஊக்குவிக்கின்றன. இந்த நடவடிக்கைகள் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063566

*****

IR/RS/DL


(Release ID: 2063617) Visitor Counter : 43


Read this release in: English , Urdu , Hindi , Punjabi