தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் 150-வது ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நினைவு அஞ்சல் தலைகள் வெளியீடு
Posted On:
09 OCT 2024 2:30PM by PIB Chennai
உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் அஞ்சல் துறை, உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் 150 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் நினைவு அஞ்சல் தலைகளின் சிறப்பு தொகுப்பை வெளியிட்டது. புதுதில்லி மேகதூத் பவனில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் துறை செயலாளர் திருமதி வந்திதா கவுல், இந்த அஞ்சல் தலைகளை வெளியிட்டார். இதில் அஞ்சல் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
1874-ம் ஆண்டு அக்டோபர் 9 அன்று சுவிட்சர்லாந்தின் பெர்னில் நிறுவப்பட்ட உலகளாவிய அஞ்சல் ஒன்றியம் நவீன அஞ்சல் ஒத்துழைப்பின் ஒரு மூலக்கல்லாகும். இந்தியா அதன் பழமையான மற்றும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். சர்வதேச அஞ்சல் ஒழுங்குமுறைகளை தரப்படுத்துவதிலும், அதன் 192 உறுப்பு நாடுகளிடையே தடையற்ற அஞ்சல் பரிமாற்றத்தை உறுதி செய்வதிலும், அஞ்சல் சேவைகளை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றுவதிலும் அஞ்சல் ஒன்றியம் ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகித்துள்ளது.
மத்திய தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய எம்சிந்தியா இந்த நிகழ்ச்சிக்கு அனுப்பியுள்ள செய்தியில், "உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு, இந்திய அரசின் அஞ்சல் துறை உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் 150 வது ஆண்டைக் கொண்டாடும் வகையில் சிறப்பு நினைவு அஞ்சல் தலைகளை வெளியிட்டது மிகவும் பெருமைக்குரியது. தகவல்தொடர்புக்கு எல்லையே இல்லாத ஒரு உலகத்தை வடிவமைப்பதில் அஞ்சல் ஒன்றியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அஞ்சல் தலைகள் மூலம், புதுமை மற்றும் உள்ளடக்கத்திற்கான இந்தியாவின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை நாங்கள் கௌரவிப்பதுடன், உலகளாவிய அஞ்சல் கட்டமைப்பில் ஒரு முக்கிய இணைப்பாக இந்தியாவின் அஞ்சல் துறையின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். ஒன்றாக, தூரங்களை இணைப்பது, சமூகங்களை ஒன்றிணைப்பது மற்றும் நாடுகளிடையே தகவல்தொடர்புகளை வளர்ப்பது ஆகியவற்றைத் தொடர்வோம்.
இந்நிகழ்வில் உரையாற்றிய திருமதி கவுல், உலகளாவிய அஞ்சல் ஒன்றியத்தின் பங்களிப்புகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, "அஞ்சல் சேவைகளில் உலகளாவிய ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் அதன்மரபு இணையற்றது. யுபியுவின் முன்முயற்சிகளில் இந்தியாவின் தீவிர ஈடுபாடு, டிஜிட்டல் முன்னேற்றங்கள் மற்றும் இ-காமர்ஸ் மூலம் அஞ்சல் சேவைகளை நவீனமயமாக்குவதற்கான எங்கள் முயற்சிகளுடன், உலகளாவிய அஞ்சல் நிலப்பரப்பில் இந்தியாவின் நிலையை மேம்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு உலக தபால் அஞ்சல் தினம் கொண்டாடப்படுவது குறிப்பாக அர்த்தமுள்ளதாக உள்ளது, ஏனெனில் இந்தியா போஸ்ட் தேசத்திற்கு ஆற்றிய 170 வது ஆண்டைக் குறிக்கிறது. நகர்ப்புற மையங்கள் முதல் தொலைதூர கிராமங்கள் வரை, அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும், நாடு முழுவதும் உள்ள மக்களை இணைப்பதிலும் இந்தியா போஸ்ட் ஒருங்கிணைந்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட மூன்று நினைவு அஞ்சல் தலைகளின் தொகுப்பு, யுபியு-வுடனான இந்தியாவின் வலுவான தொடர்பைப் பிரதிபலிக்கிறது. ஒத்துழைப்பு, புதுமை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றின் பகிரப்பட்ட மதிப்புகளையும் அது அடையாளப்படுத்துகிறது. தூரங்களைக் குறைப்பதிலும், தகவல்தொடர்பை எளிதாக்குவதிலும், உலகெங்கிலும் உள்ள மக்களை இணைப்பதிலும் அஞ்சல் சேவைகள் வகிக்கும் முக்கிய பங்கை அவை எடுத்துக்காட்டுகின்றன.
உலகின் மிகப்பெரிய அஞ்சல் வலையமைப்பைக் கொண்ட இந்திய அஞ்சல், யுபியுவின் பணியுடன் தொடர்ந்து இணைந்து, அதன் சேவைகளை நவீனமயமாக்குவதுடன், உலகளவில் அஞ்சல் உள்கட்டமைப்பின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.
***
PKV/KV/KR
(Release ID: 2063440)
(Release ID: 2063459)
Visitor Counter : 53