இந்திய போட்டிகள் ஆணையம்
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவை பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் கையகப்படுத்த இந்தியப் போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது
Posted On:
09 OCT 2024 12:01PM by PIB Chennai
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவை பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் கையகப்படுத்துவதற்கு இந்திய போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு வணிகப் பிரிவை (உணவு அல்லாத வணிகம்) பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் கையகப்படுத்துவதை உள்ளடக்கியது.
பதஞ்சலி ஃபுட்ஸ் லிமிடெட் எண்ணெய் வித்துக்களைப் பதனப்படுத்துதல், சமையல் பயன்பாட்டிற்கான கச்சா எண்ணெயை சுத்திகரித்தல், எண்ணெய் மற்றும் உணவு உற்பத்தி, சோயாவில் இருந்து உணவுப் பொருட்கள் மற்றும் கீழ்நிலை மற்றும் மேல்நிலை செயலாக்கத்திலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது. விரைவாக விற்பனையாகும் நுகர்பொருட்கள், முக்கியமாக உணவு, பிஸ்கட் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய விரைவாக விற்பனையாகும் சுகாதாரப் பொருட்கள் மற்றும் காற்றாலையிலிருந்து மின்சாரம் உற்பத்தி, பல்வேறு தயாரிப்புகளில் வர்த்தகம் செய்யும் வணிகத்திலும் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் ஆயுர்வேத மருந்துகளின் உற்பத்தி, வணிகத்தில் ஈடுபட்டுள்ளது. வீட்டு மற்றும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்கள்; பால் பொருட்கள், அரிசி மொத்த வியாபாரம் போன்றவையாகும். ஆயுர்வேதப் பொருட்கள் தனிப்பட்டப் பொருட்கள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் விரிவான உற்பத்தியிலும் இது ஈடுபட்டுள்ளது.இப்பிரிவு தலைமுடி பராமரிப்பு, தோல் பராமரிப்பு, பல் பராமரிப்பு மற்றும் வீட்டு பராமரிப்பு பிரிவுகளின் கீழ் தயாரிப்புகளை உள்ளடக்கிய வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.
ஆணையத்தின் விரிவான உத்தரவு பின்பற்றப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063392
***
IR/RS/KR
(Release ID: 2063413)
Visitor Counter : 54