ஊரக வளர்ச்சி அமைச்சகம்
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் மத்தியப்பிரதேசத்தில் இன்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து, புதிதாக அமைக்கப்படவுள்ள 500 கி.மீ சாலைகளுக்கு அடிக்கல் நாட்டினார்
Posted On:
08 OCT 2024 6:54PM by PIB Chennai
மத்தியப்பிரதேச மாநிலம் பைருண்டாவில் நடைபெற்ற ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின், ஊரக சுய வேலைவாய்ப்புத் திட்ட நிகழ்ச்சியில் மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார். பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், ஆவாஸ் சகி கைப்பேசி செயலியை அறிமுகம் செய்து வைத்த அவர், 18 மாநிலங்களில் 100 சமுதாய மேலாண்மை பயிற்சி மையங்களையும் தொடங்கி வைத்தார். பிரதமரின் கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ், 500 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக அமைக்கப்படவுள்ள சாலைகளுக்கு அடிக்கல் நாட்டிய அவர், கிராமச் சாலைகள் ஆய்வு மற்றும் திட்டமிடல் சாதனத்தையும் தொடங்கி வைத்தார். மேலும், மத்தியப் பிரதேசத்தில் 5 புதிய ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி மையங்களை அமைக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்தியப்பிரதேச முதலமைச்சர் திரு மோகன் யாதவ், ஊரக வளர்ச்சித் துறை இணையமைச்சர் திரு கமலேஷ் பாஸ்வான், மத்தியப் பிரதேச பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் திரு பிரகலாத் படேல், ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் சைலேஷ் குமார் மற்றும் மத்திய - மாநில அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் திரு சிவராஜ் சிங் சவுகான் பேசுகையில், குடிசை வீடுகளைக் கணக்கெடுக்கும் பணி இன்று முதல் நாடு முழுவதும் தொடங்குவதாகக் கூறினார். மேலும், 2018-ம் ஆண்டின் கான்கிரீட் வீடுகளின் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர்கள், இப்போது சேர்க்கப்படும் என்றார். இந்த கணக்கெடுப்பு 6 மாதங்களுக்குள் முடிக்கப்படும். இதனால் எந்த சகோதரியும் சகோதரரும் விடுபட மாட்டார்கள். தொலைபேசி, மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டர் வைத்திருந்தாலும், பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் மக்களின் பெயர் சேர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அன்புள்ள சகோதரிகளை, லட்சாதிபதி சகோதரிகளாக உருவாக்கும் இயக்கமும் நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுகிறது. லட்சாதிபதி சகோதரி என்றால், ஒவ்வொரு சகோதரியின் வருமானம் மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது என்றும் அவர் கூறினார். முன்னதாக, 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வீட்டு வசதித் திட்டத்தில் தகுதியுடையவர்களாக இருந்தனர். ஆனால் இப்போது மாதத்திற்கு 15 ஆயிரம் ரூபாய் வருமானம் இருந்தாலும், அவர்களின் பெயர் வீட்டு வசதித் திட்டத்தில் சேர்க்கப்படும். லட்சாதிபதி சகோதரி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 2.5 ஏக்கர் வரை பாசன வசதி உள்ள விவசாயிகளும், 5 ஏக்கர் வரை பாசன வசதி இல்லாத நிலமும் வைத்துள்ள விவசாயிகள், பிரதமரின் வீட்டுவசதித் திட்டப் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவர். விவசாயிகளுக்கு ஆதரவாக அமைச்சரவை தினசரி முடிவுகளை எடுக்கிறது. வெளிநாட்டு எண்ணெய் இறக்குமதியால் சோயாபீன் விலை வீழ்ச்சியடைவதை எதிர்கொள்ள, உள்நாட்டு சோயாபீன் விலையை அதிகரிக்கும் நோக்கில், இறக்குமதி செய்யப்படும் எண்ணெய்க்கு மத்திய அரசு 27.5 சதவீத வரி விதிக்கும். மத்திய பிரதேசத்தில் குறைந்தபட்ச ஆதரவு விலையில் சோயாபீன்ஸ் வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இதற்கான பதிவும் தொடங்கியுள்ளது. பாசிப்பயறை மத்தியப்பிரதேசம் ஏற்கனவே வாங்கிவிட்டது. கூடுதலாக, பாசுமதி அரிசியின் குறைந்தபட்ச ஏற்றுமதி விகிதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் சாத்தியமான விலை அதிகரிப்பை அனுமதிக்கிறது.
உளுந்து, துவரை ஆகியவற்றை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வது, 109 புதிய விதை வகைகளை வெளியிட்டது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை மத்திய அரசு விவசாயிகளுக்காக எடுத்துள்ளது என்றும் திரு சவுகான் தெரிவித்தார்.
--
MM/KPG/DL
(Release ID: 2063293)
Visitor Counter : 40