அணுசக்தி அமைச்சகம்
லடாக்கில் உள்ள ஹன்லேயில், ஆசியாவின் மிகப்பெரிய, உலகின் மிக உயரமான இமேஜிங் செரென்கோவ் ஆய்வகமான மேஸ், அணுசக்தித் துறையால் திறக்கப்பட்டுள்ளது
Posted On:
08 OCT 2024 3:32PM by PIB Chennai
முக்கிய வளிமண்டல செரென்கோவ் பரிசோதனை (MACE) ஆய்வகத்தை அணுசக்தித் துறை செயலாளரும் அணுசக்தி ஆணையத்தின் தலைவருமான டாக்டர் அஜித் குமார் மொஹந்தி, 2024, அக்டோபர் 4 அன்று லடாக்கின் ஹன்லேயில் திறந்து வைத்தார். எம்ஏசிஇ என்பது ஆசியாவின் மிகப்பெரிய இமேஜிங் செரென்கோவ் தொலைநோக்கி ஆகும். 4,300 மீ உயரத்தில் அமைந்துள்ள இது உலகிலேயே மிக உயரமான இந்த தொலைநோக்கியை இசிஐஎல் மற்றும் பிற இந்திய தொழில்துறை கூட்டாளர்களின் ஆதரவுடன், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது. அணுசக்தித் துறையின் பவளவிழா ஆண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, எம்.ஏ.சி.இ வான்காணகத்தின் திறப்பு விழா நடைபெற்றது. லடாக்கின் ஹன்லேயில் உள்ள எம்ஏசிஇ தளத்தில் டாக்டர் மொஹந்தி இதற்கான கல்வெட்டைத் திறந்து வைத்தார்.
அணுசக்தித் துறையின் செயலாளர் டாக்டர் மொஹந்தி தனது தொடக்க உரையில், எம்ஏசிஇ தொலைநோக்கியை வெற்றிகரமாகக் நிறுவிய கூட்டு முயற்சியைப் பாராட்டினார். எம்.ஏ.சி.இ. ஆய்வகம் இந்தியாவுக்கு ஒரு மகத்தான சாதனை என்று குறிப்பிட்ட அவர், உலக அளவில் காஸ்மிக் கதிர் ஆராய்ச்சியில் நமது நாட்டை முன்னணியில் வைக்கிறது என்றும் கூறினார். இந்த தொலைநோக்கி உயர் ஆற்றல் கொண்ட காமா கதிர்களைப் படிக்க அனுமதிக்கும், இது பிரபஞ்சத்தின் மிகவும் ஆற்றல் வாய்ந்த நிகழ்வுகளைப் பற்றிய ஆழமான புரிதலுக்கு வழி வகுக்கும். அறிவியல் ஆராய்ச்சியை முன்னெடுப்பதில் மட்டுமல்லாமல், லடாக்கின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதிலும் எம்ஏசிஇ திட்டம் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது என்று டாக்டர் மொஹந்தி குறிப்பிட்டார். வானியல் மற்றும் வானியற்பியலில் தொழில்வாழ்க்கையை ஆராய மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவதாக கூறிய, டாக்டர் மொஹந்தி, MACE திட்டம் எதிர்கால தலைமுறை இந்திய வானியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவின் காஸ்மிக் கதிர் ஆராய்ச்சிக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் டாக்டர் ஹோமி ஜே பாபாவின் பணி உட்பட இந்த துறையில் இந்தியாவின் முன்னோடி பங்களிப்புகளுக்கும் டாக்டர் மொஹந்தி மரியாதை செலுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2063169
-----
MM/KPG/DL
(Release ID: 2063266)
Visitor Counter : 90