பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பு, விநியோகச் சங்கிலி மறுமலர்ச்சியை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பாதுகாப்பு அமைச்சரும், ஜெர்மன் அமைச்சரும் தொலைபேசி வாயிலாக விவாதித்தனர்
Posted On:
08 OCT 2024 2:22PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், 2024 அக்டோபர் 08 அன்று ஜெர்மன் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு போரிஸ் பிஸ்டோரியஸுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார் வான்வழி மற்றும் கடல்சார் பயிற்சிகள் உட்பட, தற்போது நடைபெற்று வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகள் குறித்து அவர்கள் சுருக்கமாக விவாதித்தனர்.
பாதுகாப்பு தொழில்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது மற்றும் விநியோகச் சங்கிலி மறுமலர்ச்சியை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் விவாதித்தனர். இந்தியா - ஜெர்மனி இருதரப்பு உறவின் முக்கிய தூணாக பாதுகாப்புத் துறையை மாற்றும் நோக்கத்துடன், பாதுகாப்பு ஒத்துழைப்புகள் மற்றும் கூட்டுத் திட்டங்களுக்கு உறுதியான வடிவம் அளிக்க மீண்டும் சந்திக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
-----
(Release ID:2063119)
MM/KPG/KR
(Release ID: 2063199)
Visitor Counter : 40