அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனம் சிஎஸ்ஐஆரின் 83-வது நிறுவன தினத்தைக் கொண்டாடியது
Posted On:
08 OCT 2024 12:21PM by PIB Chennai
இந்திய தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலான சிஎஸ்ஐஆரின் கீழ் செயல்படும் டேராடூனில் உள்ள இந்திய பெட்ரோலிய நிறுவனம், சிஎஸ்ஐஆரின் 83வது நிறுவன தினத்தை நேற்று (2024 அக்டோபர் 07) கொண்டாடியது.
இதில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு தலைவர் சந்திரசேகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
கார்பன் வெளியேற்றத்தை முற்றிலும் தவிர்க்கும் இந்தியாவின் இலக்குகளை அடைய வளங்களை கூட்டாக பயன்படுத்துவதன் அவசியம் குறித்து சிறப்பு விருந்தினர் திரு சந்திரசேகர் எடுத்துரைத்தார். புதுமைகளை ஊக்குவிப்பதிலும், நிலைத்தன்மை நடைமுறைகளில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் தொழில்துறைக்கும் இடையே ஒருங்கிணைப்பு அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விழாவின் போது கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.
****
(Release ID: 2063076)
PLM/RR/KR
(Release ID: 2063081)
Visitor Counter : 39