கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய கடல்சார் பாரம்பரிய மாநாட்டை திரு சர்பானந்த சோனாவால் அறிவித்ததன் மூலம் இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம் முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது  

Posted On: 05 OCT 2024 5:48PM by PIB Chennai

 

நாட்டின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கான பாதையை வகுக்க இந்தியாவின் முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அருங்காட்சியகவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களை மத்திய  துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை  அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் இன்று சந்தித்தார். இந்தியாவின் பண்டைய கடல்சார் வரலாற்றை ஆவணப்படுத்துவதற்கும் கொண்டாடுவதற்கும் ஒரு கூட்டு அணுகுமுறையில் இந்த கூட்டம் கவனம் செலுத்தியது, இது அதன் கலாச்சார மற்றும் பொருளாதார பாதையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

2024 டிசம்பர் நடுப்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள  இந்திய கடல்சார் பாரம்பரிய மாநாடு விவாதத்தின்  சிறப்பம்சமாகும். இந்த மதிப்புமிக்க நிகழ்வு இந்தியாவின் 10,000 ஆண்டுகள் பழமையான கடல்சார் பாரம்பரியத்தை ஆராய உலகளாவிய வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை ஒன்றிணைத்து, கடல்சார் கலாச்சாரத்தில் மொழி, இலக்கியம், கலை, கட்டிடக்கலை ஆகியவற்றின் செல்வாக்கு போன்ற பல்வேறு தலைப்புகளில் உரையாடல் நடத்தும். இந்த மாநாடு இந்தியாவின் கடலோர மாநிலங்களின் தனித்துவமான மரபுகள், உணவு வகைகள், விளையாட்டுகள், ஆடைகள் ஆகியவற்றை காட்சிப்படுத்தும்.

"இந்தியாவின் கடல்சார் வரலாறு கடந்த காலத்தின் பாரம்பரியம் மட்டுமல்ல; இது எதிர்காலத்திற்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. இந்த மாநாட்டின் மூலம், கடல்சார் பாதுகாப்பில் உலகளாவிய தலைவராக இந்தியாவை நிலைநிறுத்தும் அதே வேளையில், நமது வளமான பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்." என்று நிகழ்ச்சியில் பேசிய திரு சோனாவால் கூறினார்.

இந்தக் கூட்டத்தின் போது, துறைமுகங்கள், மத்திய  துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் முன்முயற்சிக்கு முக்கிய வரலாற்றாசிரியர்கள் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தனர், இது இந்தியாவின் கடல்சார் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும் ஒரு முக்கிய செயலாக அங்கீகரிக்கப்பட்டது. இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை உலக அளவுக்கு  கொண்டு வருவதில் இந்த கூட்டு முயற்சியின் முக்கியத்துவத்தை அவர்கள் அடிக்கோடிட்டுக் காட்டினர் .

இந்தியாவை "விஸ்வகுரு" என்றழைத்த பிரதமரின் பார்வைக்கு ஏற்ப, கடல்சார் பாரம்பரிய பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் தலைமையை ஊக்குவிப்பதில் இந்த மாநாடு ஒரு மைல்கல் நிகழ்வாக அமைக்கப்பட்டுள்ளது. கடல்சார் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பாதுகாப்பில் இந்தியா தனது உலகளாவிய இருப்பை மேலும் உயர்த்துவதற்கு இந்த நிகழ்வு களம் அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***************** 

SMB/KV


(Release ID: 2062610) Visitor Counter : 32


Read this release in: English , Urdu , Hindi , Assamese