சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தூய்மை இந்தியா இயக்கத்தின் 10-வது ஆண்டை நீதித்துறை கொண்டாடியது

Posted On: 04 OCT 2024 5:08PM by PIB Chennai

தூய்மை இந்தியா இயக்கம், தூய்மையே சேவை இயக்கம், ஆகியவற்றின் 10-வது ஆண்டு நிறைவு நீதித் துறையால் 2024 முதல் கொண்டாடப்பட்டது. 2024, செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 02 வரை, பழக்க வழக்கத்தின் தூய்மை, கலாச்சாரத் தூய்மை என்ற கருப்பொருளில் இது கொண்டாடப்பட்டது.

2024 செப்டம்பர் 17 அன்று நீதித்துறையின் அனைத்து அதிகாரிகளும் ஊழியர்களும் தூய்மை உறுதிமொழி ஏற்றனர். தூய்மையே சேவை இயக்கத்தின் ஒரு பகுதியாக, இந்த இயக்கத்தில் பங்கேற்று ஆதரவை வழங்குமாறு உச்ச நீதிமன்றத்திற்கும், அனைத்து உயர் நீதிமன்றங்களுக்கும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நாட்டின் பல்வேறு நீதிமன்ற வளாகங்களில்  இந்த இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டது.

2024, செப்டம்பர் 19, அன்று சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் இணைமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், இந்த இயக்கத்தில் பங்கேற்று ஊக்குவித்தார். தூய்மையே சேவை-2024 இயக்கத்தின் கீழ் தீவிர தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக நீதித்துறையின் வளாகங்களில் கழிவுகள் அகற்றப்பட்டன.

---

PLM/KPG/DL


(Release ID: 2062098) Visitor Counter : 33


Read this release in: English , Urdu , Hindi , Punjabi