நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
"தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கம்": உணவு மற்றும் நுகர்வோர் விவகார இணை அமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா மரக்கன்று நட்டுவைத்தார்
प्रविष्टि तिथि:
03 OCT 2024 4:50PM by PIB Chennai
நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பம்பானியா தலைமையில் புதுதில்லியில் இந்திய உணவுக் கழக (FCI) பணிமனையில் “தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தின்” கீழ் மரக்கன்று நடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
தூய்மையே சேவை (SHS)-2024-ன் ஒரு பகுதியாக, உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் மூத்த அதிகாரிகள் துறையின் பல்வேறு பிரிவுகளை ஆய்வு செய்தனர். அன்றாட வாழ்வில் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைத்தனர்.
இந்திய உணவுக் கழக தலைமையகம் மற்றும் அதன் மண்டல அலுவலகங்களில் பல்வேறு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
புதுதில்லியில் உள்ள இந்திய உணவுக் கழக தலைமையகம், அருகிலுள்ள பகுதிகளில், உள்ளூர் விற்பனையாளர்களுடன் இணைந்து தூய்மைப் பேரணியை நடத்தியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2061558
------------
LKS/RS/RK/DL
(रिलीज़ आईडी: 2061585)
आगंतुक पटल : 85