பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

சிறப்பு முகாம் 4.0-க்கான ஆயத்தப் பணிகளைத் தொடங்கியது பாதுகாப்புத் துறை

Posted On: 01 OCT 2024 5:48PM by PIB Chennai

சிறப்பு இயக்கம்  4.0-ன் ஆயத்த கட்டத்தின் ஒரு பகுதியாக, நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகள், பொதுமக்கள் குறைகள், அமைச்சகங்களுக்கு இடையிலான ஆலோசனைகள், நாடாளுமன்ற உறுதிமொழிகள் மற்றும் மாநில அரசின் குறிப்புகள் போன்ற பல்வேறு அளவுருக்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை பாதுகாப்புத் துறை அடையாளம் கண்டுள்ளது. சிறப்பு இயக்கம்               4.0-ன் செயல்படுத்தல் கட்டத்தில் (02-31 அக்டோபர், 2024) மேலும் தக்கவைத்தல் / களையெடுப்பு நோக்கத்திற்காக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டிய கோப்புகளின் எண்ணிக்கையும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த அளவுருக்கள் அனைத்தும், அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு இயக்கம் 4.0 இணையதளத்தில் இலக்காக உள்ளிடப்பட்டுள்ளன.

சிறப்பு இயக்கம்  4.0 உடன் இணைந்து இந்தியா முழுவதும் மேற்கொள்ளப்படும் தூய்மை இந்தியா திட்டத்திற்கு, பாதுகாப்புத் துறை தொடர்ச்சியான அடிப்படையில் செறிவூட்டல் அணுகுமுறையை பின்பற்றுகிறது. இந்தியா முழுவதும் இது போன்ற மொத்தம் 3,832 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. பாதுகாப்பு கணக்குகள் தலைமைக் கட்டுப்பாட்டாளர், எல்லைப்புறச் சாலைகள் அமைப்பு, ராணுவ மருத்துவமனைகள், தேசிய மாணவர் படை இயக்குநரகம், இந்திய கடலோர காவல்படை, சைனிக் பள்ளிகள், உணவகங்கள் துறை, கண்டோன்மென்ட், உத்தரகாஷியில் உள்ள நேரு மலையேற்றப் பயிற்சி நிறுவனம், மற்றும் டார்ஜிலிங்கில் உள்ள இமாலயன் மலையேற்றப் பயிற்சி நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகள், இந்த இடங்களை உள்ளடக்கியவை.

அலுவலக கழிவுகள், காலாவதியான தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்துவதன் மூலம், கழிவுகளிலிருந்து செல்வத்தை உருவாக்கி, அதிலிருந்து வருவாய் ஈட்டுவது என்ற கொள்கையின் அடிப்படையில், இத்துறை தனது தூய்மை இயக்கத்தை உருவாக்கும். தூய்மையான மற்றும் ஒழுங்கற்ற பணியிடத்தை உறுதி செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும், இதன் விளைவாக, உற்பத்தித்திறன் அதிகரிக்கும்.

தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தூய்மை வீரர்களின் விலைமதிப்பற்ற மற்றும் அயராத பங்களிப்பை, முழுமனதுடன் பாராட்டுமாறு பாதுகாப்புத் துறை அமைப்புகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.

----

MM/KPG/DL



(Release ID: 2060852) Visitor Counter : 11


Read this release in: English , Urdu , Hindi