தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (2016=100) - ஆகஸ்ட், 2024
இடுகை இடப்பட்ட நாள்:
01 OCT 2024 5:34PM by PIB Chennai
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைந்த அலுவலகமான தொழிலாளர் அமைவனம், நாட்டில் உள்ள 88 தொழில் முக்கியத்துவம் வாய்ந்த மையங்களில் உள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட, சில்லறை விலைகளின் அடிப்படையில், ஒவ்வொரு மாதமும், தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டைத் தொகுத்து வருகிறது. 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான குறியீடு, இந்த செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது.
2024 ஆகஸ்டில், அகில இந்திய தொழிற்சாலை தொழிலாளர்கள் நுகர்வோர் விலைக் குறியீடு 0.1 புள்ளிகள் குறைந்து, 142.6 (நூற்று நாற்பத்தி இரண்டு புள்ளி ஆறு) ஆக இருந்தது.
2024 ஆகஸ்ட் மாதத்திற்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம், 2023 ஆகஸ்டில் 6.91% உடன் ஒப்பிடும்போது 2.44% ஆக இருந்தது.
தொழிற்சாலை தொழிலாளர்கள் நுகர்வோர் விலைக் குறியீடு அடிப்படையிலான ஆண்டு வாரியான பணவீக்கம் (பொது).
ஜூலை, 2024 மற்றும் ஆகஸ்ட், 2024 க்கான அகில இந்தியப் பிரிவு வாரியான தொழிற்சாலை தொழிலாளர்கள் நுகர்வோர் விலைக் குறியீடு:
|
வரிசை எண்
|
பிரிவுகள்
|
ஜூலை,2024
|
ஆகஸ்ட்,2024
|
|
1.
|
உணவு மற்றும் பானங்கள்
|
150.4
|
149.7
|
|
2.
|
பான், பாக்கு (சுபாரி), புகையிலை & போதைப்பொருட்கள்
|
162.0
|
161.9
|
|
3
|
ஆடை & பாதணிகள்
|
144.4
|
145.0
|
|
4
|
வீட்டுவசதி
|
131.6
|
131.6
|
|
5
|
எரிபொருள் & ஒளி
|
148.8
|
148.9
|
|
6
|
இதர
|
136.6
|
136.9
|
| |
பொதுக் குறியீடு
|
142.7
|
142.6
|
தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடுகள்
*****
MM/KPG/DL
(வெளியீட்டு அடையாள எண்: 2060791)
வருகையாளர் எண்ணிக்கை : 128