எஃகுத்துறை அமைச்சகம்
ஓக்லாவில் உள்ள அரசுப் பள்ளி பிரிதக் அறக்கட்டளையுடன் இணைந்து "பழக்கவழக்கத் தூய்மை – கலாச்சாரத் தூய்மை இயக்கத்திற்கு" ஏற்பாடு
Posted On:
01 OCT 2024 11:49AM by PIB Chennai
ஓக்லா 2-ம் கட்டம் ஹர்கேஷ் நகர், அரசு பெண்கள் சீனியர் செகண்டரி பள்ளி, பிரிதக் அறக்கட்டளை மற்றும் எஃகு அமைச்சகத்துடன் இணைந்து பழக்கவழக்கத் தூய்மை – கலாச்சாரத் தூய்மை இயக்கத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் எஃகு அமைச்சகத்தின் துணைச் செயலாளர் திரு சுபாஷ் குமார், பிரிதக் அறக்கட்டளையின் தலைவர் திரு அபய் ராஜ் சிங், பள்ளி முதல்வர் திருமதி ஷீத்தல் மற்றும் பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பள்ளியின் 200 மாணவிகள் "தூய்மையே சேவை" என்ற கருப்பொருளில், கலை மூலம் தங்கள் படைப்பாற்றல் மற்றும் கற்பனையை வெளிப்படுத்தினர்.
இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி, தூய்மை எவ்வாறு அன்றாட வாழ்க்கையின் அடிப்படை அம்சமாக மாறியுள்ளது என்பதையும், நாடு முழுவதும் பழக்கவழக்கத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் எடுத்துரைத்தார். இந்த ஆண்டின் கருப்பொருள், பழக்கவழக்கத் தூய்மை – கலாச்சாரத் தூய்மை இயக்கம் 2024, பழக்க வழக்க மாற்றத்தை வளர்ப்பதை நோக்கிய மாற்றத்தை பிரதிபலிக்கிறது. பழக்கவழக்கத் தூய்மை – கலாச்சாரத் தூய்மை இயக்கம் மூன்று முக்கிய தூண்களைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது, அவையாவன (i) தூய்மையின் பங்குதாரர் (ii) முழுமையான தூய்மை (iii) துப்புரவுப் பணியாளர் பாதுகாப்பு முகாம்.
பிரிதக் அறக்கட்டளையின் தலைவர் தனது நன்றியைத் தெரிவித்ததோடு, " பிரிதக் அறக்கட்டளையின் ஒட்டுமொத்த குடும்பத்தின் சார்பாக, நிகழ்ச்சியை செயல்படுத்துவதற்கும், தளவாடங்களைக் கையாளுவதற்கும், நிகழ்ச்சியை சுமூகமாக நடத்துவதை உறுதி செய்வதற்கும் துணை பங்குதாரராக பிரிதக் அறக்கட்டளையைத் தேர்ந்தெடுத்ததற்காக, எஃகு அமைச்சகம் மற்றும் செயில் குழுவுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்" என்றார்.
சான்றிதழ்கள் கையெழுத்திடப்பட்டு வரைபட சுவரொட்டிகளுடன் பிரிதக் அறக்கட்டளைக்கு திருப்பி அனுப்பப்படும்.
***
MM/KPG/KV
(Release ID: 2060588)
Visitor Counter : 41