பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

ராணுவ விளையாட்டு மாநாடு

Posted On: 30 SEP 2024 6:18PM by PIB Chennai

இந்தியாவின் விளையாட்டு சூழலில் இந்திய ராணுவத்தின் பங்கை எடுத்துக்காட்டுகின்ற வகையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ராணுவ விளையாட்டு மாநாட்டை  இன்று இந்திய ராணுவம் நடத்தியது. இந்த மாநாடு, இந்திய ஒலிம்பிக் சங்கம், இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுடன் கூட்டு உத்திகளை வகுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.

தேசிய பெருமை, உடற்தகுதி மற்றும் சர்வதேச கௌரவத்தை மேம்படுத்துவதில் விளையாட்டு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை அங்கீகரித்து, ஆயுதப்படைகள் விளையாட்டு வீரர்களை வளர்ப்பதில் தொடர்ந்து முதலீடு செய்துள்ளன.

இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர், வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா மற்றும் ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தொடக்க உரையில், டாக்டர் மன்சுக் மாண்டவியா, இந்தியாவின் விளையாட்டு சுற்றுச்சூழல் அமைப்பிற்கு இன்றியமையாத பங்காற்றிய இந்திய ராணுவத்தைப் பாராட்டினார்.

எதிர்கால ஒலிம்பிக்கில் கவனம் செலுத்துவதன் மூலம் இந்தியாவின் விளையாட்டு திறனைப் பயன்படுத்துவதற்கான உத்திகளை இந்த மாநாடு முழுமையாக ஆராய்ந்தது. சிறந்து விளங்குவதற்கான தொழில்நுட்பத் தரங்களை உயர்த்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது. இது ஒலிம்பிக்கிற்கான விரிவான செயல்திட்டத்தை உருவாக்க வழிவகுத்தது. உலக அரங்கில் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்யும் நடவடிக்கைகளுக்கான அடித்தளமாக இந்த மாநாட்டின் கூட்டு விவாதங்கள் அமைத்தன.

----

LKS/KPG/DL



(Release ID: 2060455) Visitor Counter : 15