அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

சிஎஸ்ஐஆர்-மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம், லக்னோ மற்றும் ஜைடஸ் நிறுவனம், நாள்பட்ட சிறுநீரக நோயால் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸுக்கு சிறந்த மருந்தை உருவாக்க உள்ளது

Posted On: 30 SEP 2024 6:20PM by PIB Chennai

லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனத்தில் (சி.டி.ஆர்.) நடத்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு அடிப்படையிலான சிகிச்சைகள் (உயிரியல்) தரவுகளின் அடிப்படையில், ஸ்க்லரோஸ்டின் என்ற புரதம், நாள்பட்ட சிறுநீரக நோயாக (சி.கே.டி) தூண்டப்பட்ட ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் மாதவிடாய் நின்ற ஆஸ்டியோபோரோசிஸ் ஆகியவற்றிற்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு நம்பிக்கைக்குரிய மருந்தாக உருவெடுத்துள்ளது. எலும்பு வளர்சிதை மாற்றத்தின் சீர்குலைவில் ஸ்க்லரோஸ்டின் புரதம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சி.கே.டி மற்றும் ஆஸ்டியோபோரோசிஸின் மேம்பட்ட கட்டங்களைக் கொண்ட நோயாளிகளில், ஸ்க்லரோஸ்டின் அளவு அதிகமாக காணப்படுகிறது.

ஸ்க்லரோஸ்டினின் சிறிய மூலக்கூறு தடுப்பான்களைக் கண்டுபிடிப்பதன் மூலம், வாய்வழி மருந்துகளை உருவாக்க, அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் லைஃப் சயின்சஸ் லிமிடெட் மற்றும் லக்னோவில் உள்ள மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை ஒரு கூட்டு ஆராய்ச்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் கீழ், சி.டி.ஆர். மற்றும் ஜைடஸ் ஆகியவை கூட்டாக முன் மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொள்ளும். இந்த முயற்சிகளில் இருந்து வெளிவரும் எந்தவொரு மருந்தும், இந்தியா மற்றும் பிற சந்தைகளுக்காக ஜைடஸால் உருவாக்கப்படும்.

நாள்பட்ட சிறுநீரக நோய் (சி.கே.டி) உலக மக்கள்தொகையில் 10% க்கும் அதிகமானவர்களை பாதிக்கிறது, இது குறிப்பிடத்தக்க சுகாதார சவால்களை முன்வைக்கிறது. நாட்பட்ட சிறுநீரக நோயின் முக்கிய சிக்கல்களில் ஒன்று கனிம வளர்சிதை மாற்றத்தை சீர்குலைப்பது, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுகளின் அபாயத்தை அதிகரிக்கும். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள், அதிக ஆபத்தில் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, சிறுநீரக செயல்பாடு மோசமடையும் அபாயம் காரணமாக, சி.கே.டி நோயாளிகளுக்கு வழக்கமான ஆஸ்டியோபோரோசிஸ் எதிர்ப்பு மருந்துகள் பெரும்பாலானவை முரணாக உள்ளன. எனவே, சிறுநீரக செயல்பாடு மோசமடையாமல், எலும்பு முறிவு அபாயத்தை குறைக்கும் ஆஸ்டியோபோரோசிஸிற்கான பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகளை உருவாக்க அவசர தேவை உள்ளது.

இந்த கூட்டாண்மை குறித்து சி.எஸ்..ஆர்-சி.டி.ஆர். இயக்குனர் டாக்டர் ராதா ரங்கராஜன் கூறுகையில், "சி.எஸ்..ஆர்-சி.டி.ஆர். டாக்டர் நைபேத்யா சட்டோபாத்யாயாவின் தலைமையில் எலும்பு வளர்சிதை மாற்றத் துறையில் விரிவாக பணியாற்றியுள்ளது" என்றார். இரு அமைப்புகளின் நிபுணத்துவம் மற்றும் திறன்கள், புதுமையான சிகிச்சைகள் மூலம், இந்தியாவின் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான பகிரப்பட்ட இயக்கம் ஆகியவை இந்த ஒத்துழைப்பை அர்த்தமுள்ளதாக ஆக்குகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

ஜைடஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனத்தின் தலைவர் பங்கஜ் படேல், "உயிரியல் மருத்துவ ஆராய்ச்சியில் சி.எஸ்..ஆர்-சி.டி.ஆர்..யின் ஆழமான வேரூன்றிய நிபுணத்துவம், மருந்து கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஜைடஸின் புதுமையான அணுகுமுறையுடன் இணைந்து, ஒரு சக்திவாய்ந்த ஒற்றுமையை உருவாக்குகிறது" என்றார். எலும்பு வளர்சிதை மாற்றக் கோளாறுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய வழிகளை, இரு நிறுவனங்களும் ஒன்றிணைந்து ஆராயும், சி.கே.டி நோயாளிகளுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் பயனுள்ள மற்றும் மலிவான சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்யும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

***

MM/AG/DL


(Release ID: 2060450) Visitor Counter : 28


Read this release in: English , Urdu , Hindi , Telugu